யானை வழித்தடங்களை பாதுகாக்க தயாராகும் 'பசுமை வழித்தட சாம்பியன்ஸ்' குழு

கோவை : நாடு முழுவதும் உள்ள யானை வழித்தடங்களை கண்காணிப்பதற்காகவும், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்திய வன அறக்கட்டளை சார்பில் அடங்கிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.

கோவை : நாடு முழுவதும் உள்ள யானை வழித்தடங்களை கண்காணிப்பதற்காகவும், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்திய வன அறக்கட்டளை சார்பில் அடங்கிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. 

வல்லுநர்கள், அறிவியலாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அடங்கிய இந்தக் குழு, தமிழகம், கேரளா, கர்நாடக, ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், உத்தரகண்ட், அஸ்ஸாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற 12 மாநிலங்களுக்கு நேரில் செல்ல உள்ளது. அங்கு பொதுமக்களை சந்தித்து யானை வழித்தடங்களை பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கின்றனர். 



"பொதுவாக யானை வழித்தடங்கள் பல்வேறு விதமாக உள்ளன. அதில், நிலம் மூலமான வழித்தடங்களில் தொடர்ந்து மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. பெரும்பாலான யானை வழித்தடங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளிப்புறமே அமைந்துள்ளன. இதனை ஆக்கிரமிப்பு செய்துள்ள மக்களிடம் இருந்து மீட்கப்பட வேண்டியது அவசியமாகும். அவ்வாறு மீட்பதற்காக எங்களது 'பசுமை வழித்தட சாம்பியன்ஸ்' குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவிற்கு ஒவ்வொரு உள்ளூர் தொண்டு நிறுவனங்களும் உதவிட இருக்கின்றனர்," என்றார் தென்னிந்திய யானைகள் வழித்தட பாதுகாப்பு திட்ட மேலாளர் கே. ராம்குமார்.

தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வெறும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிந்து, அதற்கேற்றவாறு இந்தக் குழு செயல்படும் எனவும் அவர் கூறினார்.



மேலும், 'பசுமை வழித்தட சாம்பியன்ஸ்' குழுவின் குறிக்கோளுடன் இருக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும், உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு, யானை வழித்தடங்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், புதிய யானை வழித்தடங்கள் ஏதேனும் தென்பட்டால், வனத்துறை அதிகாரிகள் மற்றும் சட்டநிபுணர்களுடன் இந்தக் குழு ஆலோசிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, யானைகளை அதன் வழித்தடங்களில் அனுப்பும் நடவடிக்கைகள் அடங்கிய இத்திட்டத்திற்கு 'கஜ யாத்திரை' என இந்திய வன அறக்கட்டளை பெயரிட்டுள்ளது. 

இதனிடையே, மேகாலயா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 3 மாவட்டங்களில் இதுவரை 5 யானை வழித்தடங்களை இந்திய வன அறக்கட்டளை மீட்டுள்ளது. 6-வது வழித்தடத்தை மீட்கும் பணி ஏரத்தாழ முடிவு பெறும் நிலையில் உள்ளது. மேலும், கர்நாடகா, அஸ்ஸாம் மாநிலங்களில் மேலும் 6 வழித்தடங்களை மீட்டெக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...