நீலகிரி : குன்னூர் நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணியை மத்திய தாழ்த்தப்பட்டோர் இணையத்தின் துணைத் தலைவர் முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

குன்னூர் நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி, பெட்போர்டு பகுதியிருந்து தீயணைப்பு நிலையம் வரை நடைபெற்றது. இந்தப் பேரணியை மத்திய தாழ்த்தப்பட்டோர் இணையத்தின் துணைத் தலைவர் முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் குன்னூர் கோட்டாட்சியர் ரஞ்ஜித் சிங், குன்னூர் நகரநல அலுவலர் மருத்துவர் ரகுநாத், வழக்கறிஞர் முகமது சலீம், மாவட்ட எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் எம். கண்ணன், குன்னூர் சுகாதார பிரிவு அதிகாரிகள், ஊராட்சி, வட்டார அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.