கோவை : உடுமலையில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பி, வீட்டு வளர்ப்பு பிராணி போல அமைதி காத்து வரும் நிலையில், முதற்கட்ட பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் சொந்த வாழ்விடத்தைத் தேடியும், சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலைக் கண்டு பிடிப்பதற்காக காட்டு யானை சின்னத்தம்பி நெடுந்தூரம் பயணத்தை மேற்கொண்டான். கடந்த 6 மாதங்களில் பட்டாசுகளை வெடிப்பது, தீப்பந்தத்துடன் பொதுமக்கள் துரத்துவது, சகோதரனைப் போன்ற விநாயகன் யானை பிரித்து வேறு இடத்திற்கு மாற்றியது போன்ற பல துயர சம்பவங்களை சின்னத்தம்பி எதிர்கொண்டான்.
மேலும், இந்த காலகட்டங்களில் பொதுமக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த சின்னத்தம்பி, மயக்கமருந்து, கயிறு, கும்கி யானைகள், வனத்துறை அதிகாரிகளின் லாரி, செய்தியாளர்களின் கேமராக்கள், ஜி.பி.எஸ். கருவிகள் என பல்வேறு விவகாரங்கள் பரீட்சையமாகி விட்டது. சுமார் 17 நாட்களாக அலைந்து திரிந்த சின்னத்தம்பி, கரும்பு, சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களின் விளைநிலங்களில் மந்தமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். இதனிடையே, வனத்துறையினர் அவனை, "டேய் சின்னத்தம்பி, டேய் சின்னத்தம்பி" என உரிமையோடு அழைத்து வந்தனர்.

எந்த நேரமும் சின்னத்தம்பியின் வனவாழ்க்கை முறை முடிவுக்கு வந்து விடுமோ என்றிருந்த பொதுமக்களின் எண்ணங்களைப் போலவே நீதிமன்றத்தின் தீர்ப்பும், வனத்துறையினரின் முடிவும் அமைந்தது. அதாவது, சின்னத்தம்பியை ஆனைமலை புலிகள் வனக் காப்பகத்தில் உள்ள வரகலியாறு யானைகள் முகாமில் கூண்டில் அடைத்து பயிற்சி அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

அதன்படி, கும்கி யானைகள், மயக்க மருந்துகளின் உதவியுடன் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பியை, யானைகள் முகாமிற்கு அழைத்து சென்றனர். அங்கு அவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கூண்டில் எவ்வாறு அடைப்பது என்பது குறித்து வன அதிகாரிகள் யோசனை செய்திருந்த வேளையில், யாருக்கும் எந்தவிதமான தொந்தரவும் கொடுக்காமல் கூண்டிற்குள் சென்றுவிட்டான் நமது சின்னத்தம்பி.

சின்னத்தம்பியிடம் பொறுமையான குணம் தொடரும் பட்சத்தில், அதற்கான பயிற்சிகளை தொடங்க வனத்துறையினர் முடிவு செய்திருந்தனர்.
"இதுவரைக்கும் சின்னத்தம்பி எந்தவிதமான ஆக்ரோஷத்தையும் வெளிக்காட்டவில்லை. இதற்கு முன்பு, நாங்கள் பயிற்சி அளித்த மற்ற காட்டு யானைகளை ஒப்பிடுகையில், இவன் மிகவும் அமைதியாக இருக்கிறான்," என்கிறார் வரகளியாறு பயிற்சி முகாமைச் சேர்ந்தவர்.
இதனிடையே, முகாமைச் சேர்ந்த பிற யானைகளுடன் சேர்ந்து சகஜமாக விளையாடி வரும் சின்னத்தம்பிக்கு, ஏற்கனவே ஆரம்பகட்ட பயிற்சிகள் தொடங்கப்பட்டுவிட்டது. கடந்த சனிக்கிழமை காலை சின்னத்தம்பி அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டை சுற்றிலும் முகாம் யானைகள் நிறுத்தப்பட்டு, சக யானைகளுடனான நட்புறவை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

"இந்த முகாமில் இருக்கும் காலகட்டம் வரையிலும், இங்குள்ள பிற யானைகளையும் பற்றி தெரிந்து கொள்வதுடன், நட்புடன் சின்னத்தம்பி பழக வேண்டும். இதன்மூலம், சின்னத்தம்பி இந்த இடம் பொருத்தமானதாக மாறும்," என்றனர் முகாம் பயிற்சியாளர்கள்.
இதனிடையே, முகாம் யானைகள் பாகன்களின் உத்தரவைக் கேட்டு, எவ்வாறு பணிபுரிகிறது என்பது குறித்து வீடியோ காட்சிகள் மூலம் சின்னத்தம்பிக்கு காட்டப்படுகிறது. இதைக் கண்டு முகாம் வாழ்க்கை முறை குறித்து சின்னத்தம்பி அறிந்து கொள்ளும். ஆனால், பாகன்களின் உத்தரவிற்கு கட்டுப்படாதபட்சத்தில், குச்சிகளை கொண்டு யானைகள் அடிக்கப்படுவதும் உண்டு.
"பயிற்சி காலங்களில் யானைகள் பாகன்களால் மிகவும் மோசமாக தாக்கப்படும் செய்திகளை பல்வேறு பக்கங்களில் இருந்து நாம் அறிந்திருக்கிறோம். இது எப்படி நடக்கிறது என்பது தெரியவில்லை. ஒருமுறை எங்களது கிராமங்களுக்குள் வரும் யானைகள் எங்களது குடும்ப உறுப்பினராகவோ, கிராமத்தின் உறுப்பினராகவோ கருதப்படும். ஆனால், விலங்குகளிடம் நாங்கள் மோசமாக நடந்து கொள்ள மாட்டோம். இங்கு முழுவதும் பயிற்சி பெற்ற பிறகு, சின்னத்தம்பி வனப்பகுதியில் நடமாட விடப்படும். அதேவேளையில், அதன் மனநிலையைப் பொறுத்து கும்கியாக மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும். சின்னத்தம்பிக்கு கும்கிக்கான பயிற்சி அளிக்கப்படவில்லை. யானை சவாரி போன்ற பணிகளுக்கு பயன்படும் யானைகளுக்கான பயிற்சியே அளிக்கப்படும்.," இவ்வாறு கூறினார் முகாமைச் சேர்ந்த இளம் பயிற்சியாளர் ஒருவர்.

சின்னத்தம்பியின் பயிற்சி குறித்து பாகன் கூறுகையில், "சின்னத்தம்பிக்கு நாங்கள் சமைத்த உணவு மற்றும் வனப்பகுதியைச் சேர்ந்த இயற்கை உணவு என இரண்டையும் சரிபாதியாக கொடுத்து வருகிறோம். நாங்கள் 24 மணிநேரமும் அவனுக்கு உணவு அளித்து வருகிறோம்," என்றார்.
வரகலியாறு முகாமில் பயிற்சி பெற்று வரும் சின்னத்தம்பியின் மீது பாகன்கள் ஏறுவதே பாகன்களின் கடும் சவாலான பணியாகும். முதலில் தனது கைகளால் உணவு வழங்கி பழக்கப்படுத்திவிட்டு, சின்னத்தம்பியிடம் நேர்மறையான எண்ணங்கள் உருவாகும்பட்சத்தில், அதன் மீது ஏறும் பயிற்சியை அளிக்க உள்ளனர். குறிப்பாக, பாகனின் உத்தரவிற்கு கட்டுப்படும் சூழல் உருவாகும் போது, சின்னத்தம்பி நிரந்தரமாக கூண்டில் இருந்து வெளியே விடப்படுவான்.