விமான நிலையங்களை தனியார்மயமாக்குதலுக்கு எதிர்ப்பு : 20-ம் தேதி முதல் விமானநிலைய ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

கோவை : திருவனந்தபுரம், அகமதாபாத் உள்ளிட்ட 6 விமானநிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தினர் வரும் 20-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

கோவை : திருவனந்தபுரம், அகமதாபாத் உள்ளிட்ட 6 விமானநிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தினர் வரும் 20-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

வரும் பிப்ரவரி மாதம் அகமதாபாத், கவுகாத்தி, மங்களூரூ, லக்னோ மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 விமான நிலையங்களை 50 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தனியார்வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு நாடு முழுவதும் உள்ள விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கடந்த டிச.,10-ம் தேதி முதல் 3 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. 

இந்த நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

"சுமார் 120 விமான நிலைய ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து நாளை பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது எங்களது கோரிக்கைகளை முன்வைப்போம். உடன்பாடு ஏற்படவில்லையெனில் வேலைநிறுத்தம் உறுதியாக நடைபெறும்," என்றார் விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...