நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணைக்காக, குற்றவாளிகளை வரும் மார்ச் 4-ம் தேதி நேரில் ஆஜராக உதகை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். மீதமுள்ள சயான், மனோஜ், திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர்அலி, சந்தோஸ்சாமி, உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது நேரில் ஆஜராகியும் வந்தனர். இந்த நிலையில், கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய 10 பேரையும் மாவட்ட நீதிமன்றம் கடந்த பிப்., 8-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஜம்சீர் அலி, சதீசன், சயான், வாளையார் மனோஜ் உதயகுமார், சந்தோஷ்சாமி, மனோஜ், ஜிதின்ஜாய் ஆகிய 6 பேர்கள் மட்டுமே ஆஜராகினர். பிஜின், திபு, சயான், வாளையார் மனோஜ் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராகாத 4 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி வடமலை உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், பிஜின்குட்டி மற்றும் தீபு ஆகிய இருவரையும் கேரள மாநிலத்தில் நீலகிரி தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளிகலான சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதனிடையே, இன்று உதகை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் காலை 11 மணிக்கு 5 குற்றவாளிகள் நேரில் ஆஜராகினர். அப்போது, மனோஜ் சாமி என்ற குற்றவாளி ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், எற்கனவே கைது செய்யப்பட்ட தீபு மற்றும் பிஜின் ஆகியோரை கோவை சிறையிலிருந்து போலீஸார் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தினர். பின்னர், வரும் மார்ச் 4-ம் தேதி அனைத்து குற்றவாளிகளும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி வடமலை ஆணை பிறப்பித்துள்ளார்.