பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஆட்சியரிடம் எஸ்.வி.நகர் மக்கள் மனு

திருப்பூர் : செல்போன் டவர் அமைக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் எஸ்.வி.நகர் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர் : செல்போன் டவர் அமைக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் எஸ்.வி.நகர் பொதுமக்கள் மனு அளித்தனர். 

எஸ்.வி. நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், குடியிருப்பு பகுதி நடுவிலேயே செல்போன் டவரை அமைக்கும் நடவடிக்கையில் தனியார் நிறுவனத்தினர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, செல்போன் டவர் உள்ள நிலையில், மீண்டும் ஒரு கோபுரம் அமைக்கும் தனியார் நிறுவனத்தின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என எஸ்.வி.நகர் பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.



மேலும், எஸ்.வி.நகரில் உள்ள தெருநாய்கள், சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், வயதானவர்கள் என பலரை கடித்துள்ளது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரியும், அம்ரூத் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டு மாதங்களாகியும், பூங்காவை திறக்காமல் காலம் கடத்தி வரும் செயலைக் கண்டிப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...