சமூகவலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை : கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் எச்சரிக்கை

கோவை : எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல், கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் தகவல்களை வெளியிடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

கோவை : எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல், கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் தகவல்களை வெளியிடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அந்த சங்கத்தின் தலைவர் உதயக்குமார் மற்றும் செயலாளர் கே.சந்திர பிரகாஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மத்திய, மாநில அரசுகள் விதிமுறைகளுக்குட்பட்டுதான் ஒப்பந்தம் பெறும் தொழில் ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர். கோவை, சென்னை மாநகராட்சிகள், பொதுப்பணித் துறை, மாநில நெடுஞ்சாலைத் துறை ஆகிய துறைகளில் டெண்டர் மூலமாக பணிகளை எடுத்து கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர். 

சிமெண்ட், மணல், ஜல்லி உள்பட பல்வேறு கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுக்கு மத்தியில், மிகுந்த சிரமங்களுக்கு இடையே இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலையில், எங்களின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், எங்களை மிரட்டும் வகையிலும் சமூக ஆர்வலர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் செயல்படுகின்றனர். அறப்போர் இயக்கம் உள்பட சில அமைப்புகள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில், அடிப்படை ஆதாரங்கள் இல்லாத செய்திகளை சமூக ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் பரப்பி வருகின்றனர். இத்தகைய செயலால் ஒப்பந்ததாரர்களின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படுகிறது. 

மேலும், ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும்போது, அந்தக் களத்துக்கே வந்து, ஒப்பந்த ஆர்டர்களை காட்ட வேண்டும் என மிரட்டல் விடுத்து, பணி செய்யவிடாமல் ஒப்பந்ததாரர்களை மிரட்டுகின்றனர். இதனால் தொடர்ந்து ஒப்பந்தங்களை எடுத்து செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. மேலும், இத்தகைய பிரச்னைகள் ஏற்படும்போது, நியாயமாக எங்களுக்கு வர வேண்டிய ஒப்பந்தத் தொகையை அரசுத் துறைகளில் இருந்து பெறுவது கடினமாகி விடுகிறது. இதனால், தொடர்ந்து பணிகளை எடுத்து செய்வதில் சுணக்கம் ஏற்படும் சூழலை சமூக ஆர்வலர்கள் என்று தங்களை கூறிக் கொள்பவர்கள் திட்டமிட்டு செய்கின்றனர். 

எனவே, ஒப்பந்தப் பணி பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், குறித்த நேரத்தில் பணியை நிறைவு செய்ய முடியாமல் போகிறது. இதனால், அடுத்த ஒப்பந்தத்தில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படுகிறது. திட்டமிட்டு செய்யப்படும் இத்தகைய இடையூறுகளால் ஒப்பந்தப் பணி தாமதமாகி, நகரின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்போர், பெரும்பாலும் கடந்த 30 ஆண்டுகளாக ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனாலும், கடந்த 2 ஆண்டுகளாகத்தான் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சில நபர்கள் இடையூறு செய்து வருகின்றனர். இத்தகைய நிலை தொடர்வதால், எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை ஒப்பந்ததாரர்கள் மீது பரப்பும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

எனவே, இனிமேல் சமூக ஊடகங்களான முகநூல், வாட்ஸ்அப், ட்வீட்டர் ஆகியவற்றில் ஒப்பந்ததாரர்கள் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவோர் மீது சங்கம் சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

ஒப்பந்ததாரர்கள் தனிநபர்கள் என்பதால் அவர்களை பற்றிய தகவல்களை பொதுத் தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் வழங்க 11 (1) மற்றும் 8 எஃப் படி வழிவகை இல்லை. அவ்வாறு தகவல் வழங்கும்பட்சத்தில் அது சார்ந்த ஒப்பந்ததாரர்களிடம் ஆட்சேபனை இல்லா சான்று பெற்ற பின்னரே வழங்க வேண்டும். சட்டத்தை மீறி தகவல் வழங்கும் அதிகாரிகள் மீது உரிய நஷ்டஈடு சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

சில என்.ஜி.ஒ. மற்றும் ஆர்.டி.ஐ. ஆர்வலர்கள் எனக் கூறிக் கொள்ளும் சிலர் வேண்டுமென்றே ஒப்பந்ததாரர்கள் உறவினர்களாக இருக்கும்பட்சத்தில் ஒரே ஒப்பந்தத்தில் கலந்து கொள்ளக் கூடாது என அவதூறு பரப்புகின்றனர். அது சட்டத்துக்கு புறம்பானது இந்திய அரசியலைப்புச் சட்டப்படி எந்த நபர் மேண்டுமானாலும் எந்தத் தொழில்களையும் முறைப்படி மேற்கொள்ள அனைவருக்கும் உரிமை உள்ளது, இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...