இலவச பட்டா வழங்கக் கோரி அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம்

கோவை : 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த வரும் தங்களுக்கு இலவச பட்டாவை வழங்க வலியுறுத்தி கோவை மாவட்டம் சாய்பாபா காலனியை அடுத்த ஜீவா நகர் மக்கள், ஆதார் மற்றும் ரேசன் அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த வரும் தங்களுக்கு இலவச பட்டாவை வழங்க வலியுறுத்தி கோவை மாவட்டம் சாய்பாபா காலனியை அடுத்த ஜீவா நகர் மக்கள், ஆதார் மற்றும் ரேசன் அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது :- தாங்கள் 45 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகிறோம். இலவச பட்டா வழங்கக்கோரி பல வருடங்களாக மனு அளித்த வரும் நிலையில், பட்டா பெற பலர் குடிசை மாற்று வாரியத்தில் பணம் செலுத்தி உள்ளனர். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மின் இணைப்பை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் இணைப்பை துண்டிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம். 

குடிசை மாற்று வாரியம் சார்பில் மாற்றாக கீரணத்தம் பகுதியில் வீடுகள் ஒதுக்கி தருவதாக கூறியுள்ளனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் பலர் தினக்கூலிகளாகவும், கல்வி பயில்பவர்களாகவும் இருப்பதால், அவர்களது அன்றாட நிலையைக் கருத்தில் கொண்டு, மாநகராட்சி எல்லைக்கு உள்ளேயே மாற்று இடங்கள் வழங்கிட வேண்டும், இவ்வாறு தெரிவித்தனர். 

இதைத் தொடர்ந்து, தங்களை வேறு இடத்தில் குடியமர்த்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களது ஆதார் மற்றும் ரேசன் அட்டையை ஒப்படைக்க போவதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...