கோவை : காஷ்மீரில் தற்கொலைப் படையினர் தாக்குதலால், வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு கோவை சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் மவுன அஞ்சலி பேரணி நடத்தப்பட்டது.
கோவை : காஷ்மீரில் தற்கொலைப் படையினர் தாக்குதலால், வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு கோவை சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் மவுன அஞ்சலி பேரணி நடத்தப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், சி.ஆர்.ஆர்.எஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோத செய்து, தற்கொலை படை நிகழ்த்திய தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் உட்பட, 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த கொடூர சம்பவத்திற்கு இந்தியாவின் சார்பில் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை சரவணம்பட்டியை சேர்ந்த சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி சார்பில் மவுன அஞ்சலி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியானது, அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி முன்பிருந்து தொடங்கி வ.ஊ.சி மைதானம் வரை சென்றது.

அதன் பின்னர், தாக்குதலில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
