கோவையில் மலக்குழி மரணங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் : புதிய மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உறுதி

கோவை : கோவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர், மலக்குழி மரணங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


கோவை : கோவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர், மலக்குழி மரணங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

கோவையில் முன்னதாக மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்த ஹரிஹரன், நகர்புற மேம்பாடு மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைவராக நியமனம் செய்யபட்டதை தொடர்ந்து, கோவைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜாமணி, இன்று பொறுப்பேற்று கொண்டார். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கூறுகையில், "எதிர்வரும் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினைகளை சமாளிக்க அதற்கு முக்கியத்துவம் அளித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாதத்தில் ஒரு நாள் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டங்களிலும், வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டங்களிலும் முழுமையாக பங்கேற்று, மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளும், சிறப்பாக செயல்பட மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் எனது பணி இருக்கும். மக்கள் குறை தீர்ப்பு நாட்களில் பொதுமக்கள் வழங்கும் மனுக்குள் பரிசீலிக்கபட்டு, 15 நாட்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.

மேலும், கோவை மாவட்டத்தில் நடைபெறும் மலக்குழி மரணங்கள் குறித்த கேள்விக்கு, " மலக்குழி மரணங்களை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்," எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...