கோவையில் பிரசவித்த தாய், சேயினை வீட்டில் சேர்க்கும் '102 இலவச ஆம்புலன்ஸ்' சேவை தொடக்கம்

கோவை : அரசு மருத்துவமனையில், பிரசவித்த தாய் சேயினை இலவசமாக வீட்டில் சேர்க்கும் 102 ஆம்புலன்ஸ் சேவை மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் தொடங்குகிறது.

கோவை : அரசு மருத்துவமனையில், பிரசவித்த தாய் சேயினை இலவசமாக வீட்டில் சேர்க்கும் 102 ஆம்புலன்ஸ் சேவை மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் தொடங்குகிறது. 



 

அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாயையும் சேயையும் இலவசமாக வீட்டில் சேர்க்கும் விதமாக, தமிழக அரசின் சுகாதரத்துறை மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் 102 என்ற ஆம்புலன்ஸ் சேவை தொடங்கபட்டுள்ளது. இந்த திட்டத்திற்கென தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 161 வாகனங்கள் வாங்கபட்ட நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று இத்திட்டம் தொடங்கபட்டுள்ளது. 

சுமார் ஒன்பது லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில், 15 நபர்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்கபட்டுள்ளன. பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையினை நாடி வரும் ஏழை மக்கள் பிரசவம் முடித்து வீட்டிற்கு செல்லும் போது சிரமம் இன்றி செல்லும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரபட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், தாய்மார்களுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கபட்டது. இதன் படி, பிரசவித்த தாய்மாருக்கு தமிழக அரசின் குழந்தைகள் சிறப்பு பெட்டக பரிசு பொருட்கள் கொடுத்து, இந்த வாகனத்தில் அவர்களது வீட்டிற்கே கொண்டு சென்று விடப்படும். இந்த திட்டத்தினை இன்று மேட்டுப்பாளையத்தில், மாநிலங்களை உறுப்பினர். ஏ.கே செல்வராஜ், ஓ.கே சின்னராஜ் கொடியைசைத்து தொடக்கி வைத்தனர். முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும் இந்த சேவை பிரசவ காலம் முடிந்த பின்னும், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடவும் பயன்படுத்திகொள்ளலாம் என கூறபட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...