ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை : உச்சநீதி மன்றம் அதிரடி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் அளித்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் அளித்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் உடல் உபாதைகள் காரணமாக அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் கடந்த மே 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது. இதையடுத்து, போலீசார் வன்முறையைக் கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர்.

அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசாணை பிறப்பித்தது. அதன்படி மே மாதம் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதையடுத்து, வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மனு அளித்தது. அதனை விசாரித்து, சில நிபந்தனைகளுடன் ஆலையைமீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதையடுத்து, நீதிபதிகள் நாரிமன் மற்றும் நவின் சின்ஹா அடங்கிய பெஞ்சில் வேதாந்தா எதிர் புகார் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்களின் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. 

தற்போது, அனைத்து விசாரணைகளும் வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில், வேதாந்தா மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க இடைக்காலத் தடை விதித்ததுடன், வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...