கோவை : கோவையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 71 பேர் காயம் மற்றும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கோவை : கோவையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 71 பேர் காயம் மற்றும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அலங்காநல்லூரை சேர்ந்த சங்கர் 26 மற்றும் மதுரை ஆலங்குளம் பகுதியை சேர்ந்த சந்துரு 26 இருவர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் 13 காளைகளை அடங்கிய மதுரையைச் சார்ந்த கார்த்திக் என்பவருக்கு ஒரு கார் ஒரு பைக் மற்றும் 2 மணைகள் முதல் பரிசாக வழங்கப்பட்டன.

9 காளைகளை அடங்கிய மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு ஒரு பைக், மற்றும் வீட்டு மணை ஒன்று 2 வது பரிசாக வழங்கப்பட்டது.
8 காளைகளை அடங்கிய மதுரையைச் சேர்ந்த அஜய் என்பவருக்கு 3 வது பரிசாக ஒரு வீட்டு மணை மற்றும் மொபட் பைக் வழங்கப்பட்டது.
அதே போல் உசிலம்பட்டியைச் சேர்ந்த போலீஸ் விஜய் என்பவரது காளைக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.

மதுரை எம்.பி.ஆம்புலன்ஸ் சேர்ந்த காளைக்கு 2 வது பரிசாக பைக் வழங்கப்பட்டது.
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்காரின் காளைக்கு மூன்றாவது பரிசாக ஸ்கூட்டி வழங்கப்பட்டது.
வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பரிசுகளை வழங்கினார்.