கோவையில் இலவச எண்டாஸ்கோபி ஸ்கிரீனிங் பரிசோதனை : 18 பேருக்கு முதல் நிலை புற்றுநோய் பாதிப்பு

கோவை : இலவச எண்டாஸ்கோபி ஸ்கிரீனிங் பரிசோதனையில், 7200 பேர் கலந்து கொண்டதாகவும், அதில் 18 பேருக்கு புற்றுநோய் முதல் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஈ.எல்.சி.ஈ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.


கோவை : இலவச எண்டாஸ்கோபி ஸ்கிரீனிங் பரிசோதனையில், 7200 பேர் கலந்து கொண்டதாகவும், அதில் 18 பேருக்கு புற்றுநோய் முதல் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஈ.எல்.சி.ஈ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 



எண்டாஸ்கோபி ஸ்கிரீனிங் பரிசோதனைகளை மேற்கொள்வது, புற்றுநோய் இருப்பதை முன்கூட்டியே கண்டறிய உதவும். இதனால், விரைவில் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள முடியும். 

ஈ.எல்.சி.ஈ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- எண்டாஸ்கோபி சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த டாக்டர் பி.எஸ்.ராஜன், 'முன்கூட்டியே குடல் புற்றுநோயைக் கண்டறிதல்' குறித்த விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறார். கோவை எண்டாஸ்கோபி மற்றும் லேப்ரோஸ்கோபி எக்சலன்ஸ் மையத்தின் தலைவரான இவர், தொடர்ச்சியாக பொதுமக்களிடம் ஆரம்பகட்ட புற்றுநோயைக் கண்டுபிடிப்பது மட்டும் அல்லாமல், அதற்கு தீர்வுகளையும் கொடுத்து வருகிறார். 

மேலும், டாக்டர்.ராஜன், சிகிச்சைக்கு வருபவர்களுக்கு, "உணவு பழக்கம் மற்றும் இரைப்பைக் கோளாறுகளுக்கான ஆலோசனைகளையும், வாழ்க்கை முறை குறித்த அறிவுரைகளையும்," வழங்கி வருகிறார். இந்த முகாமில், பெண்களுக்கும் கைனகாலஜி தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 



குறிப்பாக, இதுவரை நடத்திய இலவச முகாம்களில், 7200 பேர் கலந்து கொண்டுள்ளனர். அதில், 18 பேருக்கு புற்றுநோய் முதல் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...