குன்னூர் ஏல மையத்தின் ஜனவரி மாத வருமானம் ரூ.55.75 கோடி : சர்வதேச மேலாண்மை ஆலோசகர் தகவல்

நீலகிரி : குன்னூர் ஏல மையத்தின் ஜனவரி மாத வருமானம் ரூ.55.75 கோடி என சர்வதேச மேலாண்மை ஆலோசகர் பி.எஸ். சுந்தர் தகவல் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : குன்னூர் ஏல மையத்தின் ஜனவரி மாத வருமானம் ரூ.55.75 கோடி என சர்வதேச மேலாண்மை ஆலோசகர் பி.எஸ். சுந்தர் தகவல் தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைனில் ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்களில் நடத்தப்படுகிறது. இதில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுக்கிறார்கள். இந்நிலையில், குன்னூர் தேயிலை ஏல மையத்தின் கடந்த ஜனவரி மாத வருமானம் ரூபாய் 55 கோடியே 76 லட்சமாக உயர்ந்து உள்ளது. 



இதுகுறித்து சர்வதேச மேலாண்மை ஆலோசகர் பி.எஸ்.சுந்தர் கூறியதாவது:- இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூளின் சராசரி விலை கிலோவுக்கு ரூ.99.92 பைசா எனக் கிடைத்தது. ஆனால், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தேயிலைத்தூளின் சராசரி விலை கிலோவுக்கு ரூ.88.79 பைசாவாக இருந்தது. இதை கணக்கிடும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தேயிலைத்தூளுக்கு சராசரி விலை ரூ.11.13 பைசா உயர்ந்து உள்ளது. இதற்கு காரணம் கூடுதல் விலைக்கு அதிக தேயிலைத்தூளை வர்த்தகர்கள் வாங்கியது தான்.



கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 4 ஏலங்கள் நடைபெற்றன. அதில், 56 லட்சத்து 3 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 45 லட்சத்து 18 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. வட மாநிலங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி முதல் தேயிலை உற்பத்தியை நிறுத்த தேயிலை வாரியம் அறிவுறுத்தியது. ஏனெனில், வட இந்தியாவில் குளிர்காலத்தில் தரமான தேயிலை உற்பத்தி செய்யப்படுவது இல்லை. 

கடந்த 2 ஆண்டுகளாக அங்கு அதிகளவு சிறு தேயிலை தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, தரம் குறைந்த தேயிலைத்தூள் குளிர் காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டன. இதனால், சந்தையில் தேயிலைத்தூள் விலை குறைந்தது. இதனைக் கருத்தில் கொண்டு முதல்முறையாக குளிர்காலத்தில் வட இந்தியாவில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளை மூட தேயிலை வாரியம் உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக, வடமாநில தேயிலை வர்த்தகர்களின் கவனம் குன்னூர் ஏல மையம் பக்கம் திரும்பியது. இதனால், குன்னூர் ஏல மையத்தில் ஆரோக்கியமான போட்டி நிலவியது.



இதன் காரணமாக, தேயிலைத்தூளின் விலையில் உயர்வு ஏற்பட்டு 10 லட்சத்து 85 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் கூடுதலாக விற்பனையானது. அதிகளவு தேயிலைத்தூளை அதிக விலை கொடுத்து வர்த்தகர்கள் வாங்கியதால் குன்னூர் ஏல மையத்தில் கடந்த ஜனவரி மாத மொத்த வருமானமும் உயர்ந்தது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் குன்னூர் தேயிலை ஏல மையத்தின் மொத்த வருமானம் ரூ.55 கோடியே 76 லட்சம் ஆகும். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ.40 கோடியே 12 லட்சம் மொத்த வருமானமாகக் கிடைத்தது. இதனை வைத்து பார்க்கும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.15 கோடியே 67 லட்சம் கூடுதலாக வருமானம் கிடைத்து உள்ளது. இது 39.06 சதவீத வளர்ச்சி ஆகும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...