சின்னத்தம்பி யானையால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் : அமைச்சர் உடுமலை.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் : உடுமலை பகுதியில் சின்னத்தம்பி யானையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருப்பூர் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : உடுமலை பகுதியில் சின்னத்தம்பி யானையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருப்பூர் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டத்திற்கென போக்குவரத்து துறையால் வழங்கப்பட்ட புதிய பேருந்துகளை இன்று மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இரண்டாம் கட்டமாக, இன்று 16 பேருந்துகள் திருப்பூரிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களுக்குச் செல்லும் பேருந்துகளைத் தொடக்கி வைத்தார். 



மேலும், இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதன் பின் அமைச்சர் உடுமலை.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது ;- திருப்பூர் மாநகரிலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் 16 பேருந்துகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 15 நாட்களாக சுற்றிவந்த யானை பத்திரமாக மீட்கப்பட்டு டாப்சிலிப் முகாமிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், உடுமலையில் சின்னதம்பியால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 



இதனைக் கணக்கீடு செய்து விவசாய நிலங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும். திருப்பூர் தெற்கு தொகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை 24 மணி நேரம் செயல்படும் பாலி கிளினிக்காக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்நடைகளுக்கு உயர் சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...