திருப்பூர் : உடுமலை பகுதியில் சின்னத்தம்பி யானையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருப்பூர் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்திற்கென போக்குவரத்து துறையால் வழங்கப்பட்ட புதிய பேருந்துகளை இன்று மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இரண்டாம் கட்டமாக, இன்று 16 பேருந்துகள் திருப்பூரிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களுக்குச் செல்லும் பேருந்துகளைத் தொடக்கி வைத்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதன் பின் அமைச்சர் உடுமலை.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது ;- திருப்பூர் மாநகரிலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் 16 பேருந்துகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 15 நாட்களாக சுற்றிவந்த யானை பத்திரமாக மீட்கப்பட்டு டாப்சிலிப் முகாமிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், உடுமலையில் சின்னதம்பியால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனைக் கணக்கீடு செய்து விவசாய நிலங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும். திருப்பூர் தெற்கு தொகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை 24 மணி நேரம் செயல்படும் பாலி கிளினிக்காக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்நடைகளுக்கு உயர் சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் பேசினார்.