பாஜகவோடு கூட்டணி வைப்பது குறித்து அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் : திருப்பூரில் எம்.எல்.ஏ. தனியரசு கருத்து

திருப்பூர் : தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல், தொடர்ந்து வஞ்சித்த பாஜகவோடு, அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல், தொடர்ந்து வஞ்சித்த பாஜகவோடு, அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். 

திருப்பூரில் புதிய அரசு பேருந்துகள் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. அதில், கலந்துகொள்ள வந்த அதிமுகவின் தோழமை கட்சி, கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவர் மற்றும் எம்.எல்.ஏ. தனியரசு செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, அவர் பேசியதாவது ;- அதிமுக, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுகவினர் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் எந்தவொரு கோரிக்கைக்கும் செவி சாய்க்காமல் வஞ்சகம் செய்துவந்த பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கக்கூடாது என கொங்கு இளைஞர் பேரவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்தவுடன் எங்களது ஆதரவு யாருக்கு என தெரிவிக்க இருக்கிறோம். மீண்டும் மோடி பிரதமராக முடியாது என்பதை உணர்ந்தே நடிகர் ரஜினி யாருக்கும் ஆதரவில்லை என்ற வெளிப்படையான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அது வரவேற்கத்தக்கது. ஈ.பி.எஸ், ஓபிஎஸ் அணிகள் சசிகலா, டிடிவி அணிகளுடன் இணைந்தே தேர்தலை சந்திக்கவேண்டும் என சுப்பிரமணியசாமி சொல்லியிருப்பதை வரவேற்கிறோம். எங்கள் விருப்பமும் அதுவே. இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...