தேவர்சோலையில் துப்பாக்கி தோட்டாக்களுடன் வந்த 5 பேர் கைது

நீலகிரி : தேவர்சோலை போலீஸ் நிலையம் முன்பு நடத்திய வாகன சோதனையில் துப்பாக்கி தோட்டாக்களுடன் வந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி : தேவர்சோலை போலீஸ் நிலையம் முன்பு நடத்திய வாகன சோதனையில் துப்பாக்கி தோட்டாக்களுடன் வந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கூடலூர் தாலுகா தேவர்சோலை போலீஸ் நிலையம் முன்பு சப்–இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரி நோக்கி சென்ற கேரள பதிவு எண் கொண்ட ஒரு காரை நிறுத்தினர். பின்னர் காரில் இருந்த 5 பேரை பிடித்து சோதனை செய்தனர். 

அந்த சோதனையில், ஒருவரது சட்டை பையில் 3 துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே உள்ள கருவாரகுன்டு கிராமத்தை சேர்ந்த அப்துல் சலீம் மகன் சாகுல் அமீது(வயது 24), போக்கர் மகன் யூசுப்(36), அம்சா மகன் ரெனிஷ்(32), அய்துரு மகன் மொய்தீன் என்ற பைசல்(34), ரஷீது மகன் கயிஸ் சனூப்(22) ஆகியோர் என்பது தெரியவந்தது. 

மேலும், அவர்கள் நாங்கள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் என்றும், கூடலூர் வழியாக சுல்தான்பத்தேரிக்கு காரில் செல்லும்போது சாலையில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்தது என்றும், அதை எடுத்துக்கொண்டு செல்லும்போது சிக்கிவிட்டோம் என்றும் போலீசில் கூறியுள்ளனர். பின்னர் தேவர்சோலை போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். மேலும், துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...