கோத்தகிரியில் வீட்டின் கதவை உடைத்து கரடிகள் அட்டகாசம்

நீலகிரி : கோத்தகிரி பகுதியில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்ற கரடிகளால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

நீலகிரி : கோத்தகிரி பகுதியில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்ற கரடிகளால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

கோத்தகிரி மிஷன் காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ்(வயது 52). இவர் தனது வீட்டின் அருகில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஹரிதாஸ் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்கு தூங்க சென்றார். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டின் முன்புற கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. உடனே தூக்கத்தில் இருந்து ஹரிதாஸ் எழுந்தார்.

பின்னர் வீட்டின் வெளிப்புற மின்விளக்கை எரியவிட்டு, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். அப்போது 3 கரடிகள் வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைய முயற்சிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து, செல்போன் மூலம் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். ஆகையால், அனைவரும் அங்கு திரண்டு வந்து தீப்பந்தம் காட்டி, கரடிகளை விரட்டினர். மேலும், அந்த கரடிகள் அருகிலுள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்று மறைந்தன. வீட்டின் கதவை உடைத்து கரடிகள் அட்டகாசம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கோத்தகிரி பகுதியில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது, வீட்டின் கதவை உடைத்து கரடிகள் உள்ளே நுழைய முயன்றுள்ளன. இதனால், எங்களது உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறி அடிக்கடி ஊருக்குள் நுழையும் கரடிகளை, உடனடியாக கூண்டு வைத்து பிடிக்கவும், கோத்தகிரியில் வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...