மேட்டுப்பாளையத்தில் பாக்கு சீசன் தொடக்கம் : கொத்து கொத்தாக காய்த்திருக்கும் பாக்கு குலைகளை அறுத்தெடுக்கும் பணிகள் தீவிரம்

கோவை : மேட்டுப்பாளையத்தில் பாக்கு சீசன் தொடங்கிய நிலையில், பாக்கு குலைகளை அறுத்தெடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை : மேட்டுப்பாளையத்தில் பாக்கு சீசன் தொடங்கிய நிலையில், பாக்கு குலைகளை அறுத்தெடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள மலையடிவார பகுதியான கல்லாரில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் பாக்கு மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. கல்லார் பகுதியில் ஆண்டு முழுவதும் சீரான சீதோஷின நிலை நீடிப்பதாலும், ஆங்காங்கே நீரூற்றுகள் இருப்பதாலும் இப்பகுதியில் பாக்கு விவசாயமே பிரதான தொழிலாகப் பார்க்கப்பட்டு வருகிறது. 



இங்கு விளையும் மங்களா, மொகித், சிமோகா, மற்றும் நாட்டு பாக்கு ரகங்கள் உள்நாடு மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகி வருகின்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக, இப்பகுதியில் போதுமான அளவிற்கு மழை இல்லாததின் காரணமாக, அதிகளவு தண்ணீர் தேவைப்படும் பாக்கு தோட்டங்களில் விளைச்சல் பெருமளவு குறைந்தது.

இந்நிலையில், கடந்தாண்டு போதிய அளவு மழைப்பொழிவு இருந்த காரணத்தினால், தற்போது பாக்கு மரங்களில் காய்கள் கொத்து கொத்தாய் காய்த்துள்ளன. கடந்த மூன்றாண்டுகளாக, போதிய விளைச்சல் இல்லாமல் வருவாய் இழப்பைச் சந்தித்து வரும் பாக்கு விவசாயிகள் தற்போது தொடங்கியுள்ள பாக்கு சீசன் விளைச்சலால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால், கல்லார் பகுதி பாக்கு தோப்புகளில் பாக்கு குலைகளை அறுத்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 



 

அறுக்கும் பணி : 

கிளைகளின்றி நீண்ட குட்சியை போல் சுமார் நூறு முதல் இருநூறு அடிவரை உயரமாக வளர்ந்து காட்சியளிக்கும் பாக்கு மரங்களில் ஏறும் பாக்குத்தோப்பு தொழிலார்கள் பாக்கு குலைகளை அறுத்து கீழே வீசுகின்றனர். ஒரு மரத்தின் உச்சியில் இருந்து அருகில் உள்ள மற்றொரு மரத்திற்குத் தாவி தாவிப் பயணிக்கின்றனர். வளையும் தன்மையுடைய பாக்கு மரத்தை மேலிருந்தே வளைத்து அடுத்த மரத்திற்குச் செல்கின்றனர். அறுக்கப்படும் பாக்கு குலை மேலிருந்து கீழே சிதறி விழும் பாக்குப்பழங்களை பிற பெண் தொழிலார்கள் சேகரித்து, தரம் பரித்து மூட்டைக் கட்டி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். 

மேலும், விளைச்சல் கைகூடி வந்தாலும் சீசன் காலங்களில் யானை, காட்டுப்பன்றி மற்றும் குரங்குகளிடம் இருந்து பாக்கு மரங்களைக் காப்பது பெரும் சிக்கலாக உள்ளதாகத் தெரிவிக்கும் பாக்கு விவசாயிகள், வன விலங்குகளின் ஊடுருவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...