பேருந்து வசதி இல்லாததால் கோவைக்கு ஜல்லிக்கட்டு போட்டி காண வந்தோர் கடும் அவதி

கோவை : கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்தோர் பேருந்து வசதி இல்லாததால் மிகுந்த அவதியடைந்தனர்.

கோவை : கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்தோர் பேருந்து வசதி இல்லாததால் மிகுந்த அவதியடைந்தனர்.

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கம் சார்பாக செட்டிபாளையம் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் இரண்டாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண கோவை காந்திபுரம், பீளமேடு, டவுன்ஹால், சின்னியம்பாளையம், போத்தனூர், மேட்டுப்பாளையம், அன்னூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களும், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட மக்களும் என சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர். 



விடுமுறை தினம் என்பதால் பலரும் குடும்பத்துடன் வந்திருந்தினர். ஆனால், மக்கள் வந்து போக வசதியாக அங்கு பேருந்து வசதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தி தரப்படவில்லை. பைபாஸ் சாலை என்பதால் பேருந்து நிறுத்தம் செல்ல சுமார் 3 கி.லோ மீட்டர் தூரம் வரை ஊருக்குள் செல்ல வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியை அடுத்து, அங்கு தற்காலிகமாக பேருந்து நிறுத்தம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் அமைக்கப்படாததால் மக்கள் சுமார் 3 கி.லோ மீட்டர் தூரம் வரை நடந்தே பேருந்து நிலையங்கள் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால், மக்கள் மிகுந்த அவதியடைந்தனர்.



இது குறித்து ஜல்லிக்கட்டு போட்டி காண வந்த சுகுமார் என்பவர் கூறுகையில், "கடந்த ஆண்டும் இதே பிரச்சினைதான். பேருந்து நிறுத்தம் அமைக்காததால், பேருந்து வசதி இல்லாமல் மிகவும் அவதியடைந்தோம். இந்தாண்டும் இதே நிலைதான்," என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...