நீலகிரி : ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு, உதகை ஆட்டாே ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நீலகிரி : ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு, உதகை ஆட்டாே ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்ச்சியில், ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, வீர மரணம் அடைந்த ராணுவ படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, அங்கு வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்களின் புகைப்படம் பதியப்பட்ட நினைவு பேனர் முன் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.