திருப்பூர் : திருப்பூர் அருகே, பி.ஏ.பி., வாய்க்காலில், நோய் வாய்ப்பட்டு இறந்த கோழிகள் மிதந்து வந்ததால், குடிநீராகப் பயன்படுத்த முடியவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட திருமூர்த்தி மலை பகுதியில் இருந்து பி.ஏ.பி வாய்க்கால் மூலம் 3வது மண்டல பாசனத்திற்காக தற்போது தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருமூர்த்தி மலை முதல் வெள்ளக்கோவில் வரை சுமார் 94 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறக்கூடிய வகையில் தண்ணீர் சென்று வருகிறது.

இந்த வாய்க்காலின் ஒரு பகுதியாக, அவினாசிபாளையம் பகுதியில் உள்ள கிளை வாய்க்காலில் அங்குள்ள பொதுமக்கள் துணி துவைப்பது, இளைஞர்கள் வாய்க்காலில் விளையாடுவது , வெயில் காலம் என்பதால் குடிநீரை சேமித்து வைப்பது ஆகியவற்றிற்கு வாய்க்காலை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பல்லடத்தில் நோய்வாய்ப்பட்ட இறக்கும் கோழிகளை சுகாதாரத்துறை அறிவுருத்தலின்படி, அப்புறப்படுத்தாமல் சில பண்ணையாளர்கள் வாய்க்காலில் வீசி விட்டு செல்வதாக குற்றம் சாட்டுகின்றனர் .

இறந்த கோழிகள் வாய்க்காலில் மிதந்து வருவதால் அந்த தண்ணீரை விவசாயிகள் கால்நடைகளுக்கு சேமித்து வழங்கவதில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால், தொற்று நோய் பரவக்கூடிய நிலை உள்ளது. எனவே, அரசின் சுகாதாரம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர்.