வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க வினர் தேசிய கொடியேந்தி மரியாதை : தீபமேந்தி கண்ணீர் அஞ்சலி

கோவை : காஷ்மீரில் தற்கொலைப் படை வீரர்கள் தாக்குதலால் வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு, மேட்டுப்பாளையத்தில் பாஜகவினர், தேசிய கொடியேந்தி வீரவணக்க மரியாதை செலுத்தினர்.

கோவை : காஷ்மீரில் தற்கொலைப் படை வீரர்கள் தாக்குதலால் வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு, மேட்டுப்பாளையத்தில் பாஜகவினர், தேசிய கொடியேந்தி வீரவணக்க மரியாதை செலுத்தினர். 

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், துணை ரானுவப்படையினை சேர்ந்த நாற்பது சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதில், தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியம் மற்றும் சிவச்சந்திரன் என இரு வீரர்களும் அடங்குவர். 

இந்த கோழைத்தனமான தாக்குதலை, பல்வேறு தரப்பினரும் கண்டித்து வரும் நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இறந்த வீரர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பெண்கள் உள்ளிட்ட பலரும் கைகளில் தேசியக்கொடியினை ஏந்தியபடி பங்கேற்றனர். 

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த வீரவணக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கைகளில் தீபம் ஏந்தி, மலர் தூவி மரணமடைந்த வீர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள், நம் வீரர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது மிக கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம் என வலியுறுத்தினர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...