வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு கிடையாது எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு. மேலும், நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது.
அதனால், ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ, மன்றத்தின் கொடியோ எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, பரப்புரை செய்வதற்காகவே யாரும் பயன்படுத்தக் கூடாது.
தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினை தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான வலுவான ஆட்சி அமைத்து, யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்னையை நிரந்தமாகத் தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களா அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினி இன்று ஆலோசனை நடத்திய நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.