உதகை அரசு அருங்காட்சியகத்தில் சிற்பங்களை பாதுகாப்பது குறித்து கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

நீலகிரி : உதகை அரசு அருங்காட்சியகத்தில் சிற்பங்களை பாதுகாப்பது குறித்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நீலகிரி : உதகை அரசு அருங்காட்சியகத்தில் சிற்பங்களை பாதுகாப்பது குறித்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நீலகிரி, உதகை அரசு அருங்காட்சியகத்தில் பாறைகள், கனிமங்கள், அஞ்சல் தலைகள், நாணயங்கள், பனை ஓலை மற்றும் மூங்கில் ஓலைச்சுவடிகள் போன்றவை சேகரித்துப் பராமரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. மேலும், நீலகிரி வாழ் பறவைகள், விலங்குகளின் உடல்கள் பதப்படுத்தி காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. 

உதகை அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உதகை அரசு கலைக்கல்லூரியில் வரலாறு துறை பிரிவில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு, மரச்சிற்பங்கள், கற்சிற்பங்கள், தோல் பாவைகள், மண்பாண்டங்கள், இரும்பு வாள், ஓலைச்சுவடிகளை வேதியியல் முறையில் பாதுகாப்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமில், அருங்காட்சியக காப்பாட்சியர் முருகவேல் பயிற்சி அளித்து பேசும்போது, மரச்சிற்பங்கள், கற்சிற்பங்கள் போன்றவற்றில் பாசி, பூஞ்சை மற்றும் தூசி படிந்து காணப்படும். இதனைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்க முடியும். சலவை சோடா, எரிசாராயம் உள்ளிட்ட வேதியியல் பொருட்களை தண்ணீருடன் கலந்து, பின்னர் பிரஷ் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இந்த பயிற்சி முடிவில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும், என்று கூறினார். 

"நாங்கள் கையுறைகள் அணிந்து மரச்சிற்பங்கள் மற்றும் கற்சிற்பங்களை சுத்தம் செய்து பயிற்சியில் ஈடுபட்டோம். இதன் மூலம் பழங்கால சிற்பங்கள் குறித்த வரலாற்றை அறிய முடிகிறது. மேலும், இது வரலாறு துறையில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள உதவுகிறது. பயிற்சியில் அரசு மூலம் சான்றிதழ் வழங்கப்படுவதால், படிப்பை முடித்து வேலைக்கு செல்லும் போது நாங்கள் எளிதில் தேர்வாகி விடுவோம்," என்றனர் கல்லூரி மாணவ, மாணவிகள். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...