கோவை இன்டர்சிட்டி ரயிலில் திடீர் சோதனை : பயணச்சீட்டு இன்றி பயணித்தவர்களிடம் ரூ.11,420 அபராதம் வசூல்

கோவை : கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென சோதனை மேற்கொண்டதில், 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ.11,420 அபராதம் வசூலிக்கப்பட்டது.

கோவை : கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென சோதனை மேற்கொண்டதில், 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ.11,420 அபராதம் வசூலிக்கப்பட்டது. 

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் உத்தரவின் பேரில், வண்டி எண் 12680 கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில், சேலம்-ஜோலார்பேட்டை இடையே வணிக பிரிவு அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில், முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் மேற்பார்வையில், 7 டிக்கெட் பரிசோதகர்கள், 2 ரயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோர் பயணிகளின், பயணச்சீட்டுகளை சோதனை செய்தனர். இதையடுத்து, 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ.11,420 அபராதம் வசூலிக்கப்பட்டது. 

மேலும், ரயிலில் உள்ள உணவகத்தில் உணவின் தரம், உணவு சமைக்கும் இடம், சமையல் பொருட்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பயணிகளிடம் உணவின் தரம் குறித்து கேட்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புகார்களைத் தெரிவிக்க 138 என்ற உதவி எண், ரயில்வே தொடர்பான விவரங்களுக்கு 139 என்ற உதவி எண் ஆகியவற்றைத் தொடர்பு கொள்வது குறித்து பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இதுகுறித்து முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் கூறுகையில், "ரயில்களில் திடீர் சோதனை மேற்கொண்டு பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல, ரயில் பெட்டியில் உள்ள உணவகத்தின் தரம் மற்றும் பயணிகளின் தேவையான வசதி உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும்," என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...