கோவையில் இரண்டாம் முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் : 600 -க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

கோவை : கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு விளையாட்டு விழா நாளை நடைபெறவுள்ளது.

கோவை : கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு விளையாட்டு விழா நாளை நடைபெறவுள்ளது. 

இவ்விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுலவர்கள், கோவை ஜல்லிக்கட்டு சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். 

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது :- நாளை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையிலுள்ளது. இதற்காக, 30 ஏக்கர் நிலம் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், விழாவைக் காண வருகை தரும் பொதுமக்கள், விவசாய பெருங்குடி மக்கள் பார்த்து ரசிப்பதற்கு ஏற்றவாறு பிரம்மாண்டமான பார்வையாளர் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த போட்டியில் மதுரை, அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகளும், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், வாடிவாசல், மாடுகள் காத்திருக்கும் இடம், மாடு பிடிக்கும் பகுதியில் தேங்காய் மஞ்சிகள் அமைத்தல், வாகன நிறுத்துமிடம், முதலுவதவி மையம் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. 

குறிப்பாக, இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. வெற்றி பெரும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் தங்க நாணயம், நான்கு சக்கரவாகனம், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படவுள்ளது. மேலும், போட்டியைக் காண எந்தவித கட்டணமும் கிடையாது. 

இந்த போட்டிக்கு அழைத்து வரப்படும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களைக் கண்காணிக்க கால்நடை பராமரிப்புத்துறை அலுலவர்கள் மற்றும் மருத்துவர்களைக் கொண்ட 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் சான்று அளிக்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டு விழாவில் அனுமதிக்கப்படுவார்கள். இந்த விழாவிற்கான பாதுகாப்பு பணிக்காக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், இவ்வாறு அந்த குறிப்பில் கூறப்பட்டிருந்தது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...