கோவையில் விதிமுறைகளை மீறி வைத்திருக்கும் பேனர்களை அகற்றக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தரையில் படுத்து போராட்டம்

கோவை : ஆர்.எஸ்.புரம் பகுதியில் விதிகளை மீறி வைத்திருந்த பேனர்களை கிழித்து எறிந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, பேனர்களை அகற்றக் கோரி தரையில் படுத்து போராட்டம் நடத்தினார்.


கோவை : ஆர்.எஸ்.புரம் பகுதியில் விதிகளை மீறி வைத்திருந்த பேனர்களை கிழித்து எறிந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, பேனர்களை அகற்றக் கோரி தரையில் படுத்து போராட்டம் நடத்தினார். 



கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அங்கு, வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, 3 பேனர்களைக் கிழித்து ஏறிந்தார். மேலும், நாளை கோவையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளையொட்டி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி படம் போட்டிருந்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதனையும் சமூக ஆர்வலர் ராமசாமி கிழிக்க முயன்றார். 



அப்போது, அவரைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர், பேனரை அகற்றி விடுவதாக உறுதியளித்தனர். ஆனால், உடனடியாக பேனரை அகற்றக் கோரி, பேனர் முன்பு தரையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதையடுத்து, "பேனரை அகற்றும் வரை அவ்விடத்தில் இருந்து செல்ல போவதில்லை. இதுதொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்", என டிராபிக் ராமசாமி தெரிவித்தார். 



இதையடுத்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி படம் போட்டிருந்த பேனரின் ஒரு பகுதியை அவர் கிழித்தார். இதனால், காவல்துறையினருக்கும், டிராபிக் ராமசாமிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 


Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...