பாராளுமன்ற கூட்டத்தொடரில் பின்னாலடைத்துறையை மேம்படுத்த திருப்பூர் எம்.பி சத்தியபாமா வலியுறுத்தல்

திருப்பூர் : கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட திருப்பூர் எம்.பி சத்தியபாமா பின்னாலடைத்துறையை மேம்படுத்தும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.


திருப்பூர் : கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட திருப்பூர் எம்.பி சத்தியபாமா பின்னாலடைத்துறையை மேம்படுத்தும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். 

அதில், கூறியிருப்பதாவது :- 

1). பவானி ஜமக்காளம் - கைத்தறி தரைவிரிப்புகளுக்கு ஜி.எஸ்.டி வரி முறையில், பவானி ஜமக்காளம் உள்ளிட்ட தரைவிரிப்புகளுக்கு 5% வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரிக்கை. 

2). கைத்தறித்துறை, நெசவாளர்களாக உள்ள தொழில் முனைவோர் தகுதியுடைய பயனாளிகளில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் நலத்திட்டங்களின்கீழ் அவர்கள் நூலிழை பெற முடியாத நிலைஉள்ளது. எனவே, அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும், நெசவாளர் அடையாள அட்டைகளை வழங்கவும், நேரடி மானியத்தை நேரடியாக வங்கிக்கணக்குகளில் செலுத்தும் டி.பி.டி திட்டத்தின்கீழ் திட்டப் பயன்களை அடைய வழிவகை செய்ய கோரிக்கை.

3). வழக்கமான விசைத்தறி தொழில் மேம்பாட்டுக்காக, கவனம் செலுத்த பிரத்தியேகமாக ஒரு துறையை அமைக்கவேண்டும்.

4). விசைத்தறி துறை சார்ந்தவர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி முத்ரா திட்டக் கடன்கள் கிடைக்கத் தேவையான அறிவுறுத்தல்களை வங்கிகளுக்கு அமைச்சர் அளிக்க வேண்டும். 

5). தொழில்துறைக்கும் அரசுக்கும் இடையே பாலமாக, செயல்படும் பின்னலாடைத் துறைக்கான வாரியத்தை அரசு அமைக்க வேண்டும். 

6). பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12% இருந்து 5 சதவீதமாகவும், பொது சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 18% இருந்து 5% சதவீதமாகவும் குறைக்க கோரிக்கை. 

7). திருப்பூரின் வளர்ச்சி வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதோடு, நாட்டிற்கு அந்நிய செலாவணியையும் ஈட்டித் தரும் வல்லமை உடையக் கட்டமைப்பு வசதிகளை வழங்கக் கோரிக்கை.

8). திருப்பூரில் உள்ள ஜவுளித்துறை மையங்களில் தொழிலாளர்களின் திறன்மேம்பாட்டை உறுதி செய்தல்.

9). திருப்பூருக்குக் குடிபெயர்ந்து வரும் தொழிலாளர்கள் வசதியாகத் தங்குவதற்காக, ஒரு லட்சம் வீடுகளைக் கட்டித்தருவதற்கு உதவ கோரிக்கை. 

10). திருப்பூர் பின்னலாடை மைய விரிவாக்கத்துக்கு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான ஆதரவளிக்க கோரிக்கை. 

11). முன்கூட்டியே அனுமதி பெறும் ஈ.பி.சி.ஜி திட்டத்தின் கீழ் இறக்குமதித் தீர்வை விவரங்களை சமர்ப்பிக்கும், ஏற்றுமதியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையை திரும்பப் பெறுவதற்கான அனுமதி வழங்கவேண்டும். 

12). ஈ.ஜி.எம் விவரங்களை ஏற்றுமதி யூனிட்டுகள் தற்போது மேனுவலாக தாக்கல் செய்துவருகின்றன. ஜிஎஸ்டி தொகையை எளிதாகத் திரும்பப்பெறும் வகையில், இதனை இணையம் மூலமாகத் தாக்கல் செய்யும் வசதியை உருவாக்கக் கோரிக்கை. 

 

13). ஏழை ஊழியர்களுக்கு சேவை புரியவும், சமூகத்தின் நல்லிணக்கத்தைக் கொண்டுவரவும் இந்த திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகத்தை மண்டல அலுவலகமாகத் தரம் உயர்த்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை. 

14). திருப்பூர் ரயில் நிலையத்தில் முழுமையாக கூரை வேயப்பட்ட கூடுதல் நடைமேடை, கூடுதல் டிக்கெட் புக்கிங் கவுண்டர், ரயில் வண்டியின் பெட்டிகள் வருவது மற்றும் புறப்பட்டுச் செல்வது பற்றிய டிஜிட்டல் எல்.இ.டி தகவல் போர்ட, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக பேட்டரியால் இயங்கும் 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...