16 மணி நேரம் நீடித்த போராட்டத்திற்கு பின் கரோலில் அடைக்கப்பட்டான் சின்னத்தம்பி!

கோவை : வனத்துறையினரின் 16 மணி நேரப் போராட்டத்திற்கு பின் வரகழியாறு வனப்பகுதியில் உள்ள யானைகள் முகாமில், கரோல் எனப்படும் கூண்டில் அடைக்கப்பட்டான் சின்னத்தம்பி.

கோவை : வனத்துறையினரின் 16 மணி நேரப் போராட்டத்திற்கு பின் வரகழியாறு வனப்பகுதியில் உள்ள யானைகள் முகாமில், கரோல் எனப்படும் கூண்டில் அடைக்கப்பட்டான் சின்னத்தம்பி.



மாநில அளவில் இரண்டு வாரங்களாகப் பேசப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பி, சுமார் 16 நாட்கள் ஊருக்குள் வலம் வந்தது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள கண்ணாடி புதூரில் நேற்று காலை 9.30 மணியளவில் சின்னத்தம்பிக்கு, மயக்க ஊசி ( கீட்டமைன் மற்றும் சைலசைன், 8 மி.லி) செலுத்திப் பிடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 16 மணி நேரமாக இந்த பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், நள்ளிரவு 1.40 மணியளவில் சின்னத்தம்பியை வரகழியாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்று கரோல் எனும் கூண்டில் அடைத்தனர். 



சின்னதம்பிக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பதற்காகவே, முன்னேற்பாடாக கரோல் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும், வனத்துறை மருத்துவர் கலைவாணன் பரிந்துரையின் பேரில், நள்ளிரவு 12.15 மணியளவில் சின்னத்தம்பியின் மனநிலையைத் தணிக்க, முகாமில் விஜயலெட்சுமி மற்றும் சிவகாமி ஆகிய இரண்டு பெண் கும்கி யானைகள், அதனுடன் உரையாடலை நிகழ்த்து வகையில் லாரிக்கு வலது புறத்தில் நிறுத்தப்பட்டது. 

இதற்கிடையில், காயம் ஏற்படாமல் இருக்க வயநாட்டிலிருந்து ஏற்பாடு செய்திருந்த சிறப்பு வாகனத்தில் முகாமிற்கு செல்லும் வழியில், சின்னதம்பி யானை அதனைக் கட்டியிருந்த கட்டையை உடைத்தது. இந்த செயலால், அதன் மீது சிராய்பு காயங்கள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, காட்டு யானைக்கு கூடுதலாக மயக்க மருந்து அளிக்கப்பட்டு, பாதுகாப்பாக வாகனத்தில் கட்டப்பட்டது. 

கலீம் மற்றும் முகாமிலுள்ள சிவகாமி மற்றும் விஜயலெட்சுமி ஆகிய கும்கி யானைகள் உதவியுடன் சின்னத்தம்பி கரோலுக்குள் அனுப்பப்பட்டது. சின்னதம்பியின் கால்களிலும், கழுத்திலும் வனத்துறையினர் கயிறு கட்டியிருந்த போதும், அதனை வேறேந்த துன்புறுத்தலுக்கும் ஆளாக்காமல் கரோலுக்குள் அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கரோலுக்குள் அனுப்பிய மறுகணமே அதன் கதவு மூடப்பட்டது. 

கூடுதலாக, 50 மி.லி அளவிலான பி-காம்பிளக்ஸ் மற்றும் நுண்ணுயிர் கொல்லி மருந்து யானைக்கு செலுத்தப்பட்டது. இந்நிலையில், சின்னத்தம்பியை எப்போதுமே கண்காணிப்பில் வைத்திருக்கவும், கவனித்துக் கொள்ளவும் யானை பாகன் மற்றும் அவருக்கு உதவியாளரும், சுழற்சி கணக்கில் பணி புரிய நியமிக்கப்பட்டுள்ளனர். 



ஆனைமலை புலிகள் காப்பகத்தின் இயக்குனர் வி.கணேசன் இது குறித்து கூறும் போது, சின்னத்தம்பி மீது சிறப்பு கவனம் செலுத்தி, அதற்கு பயிற்சிகள் வழங்கும் பணி நடைபெறும், என்றார். "நாங்கள் அளிக்கும் பயிற்சிக்கு சின்னத்தம்பி ஒத்துழைப்பதை பொறுத்துதான், அதனை கரோலில் இருந்து வெளியேற்ற முடியும். சுமாராக 45 நாட்கள் முதல் 2 மாதங்கள் வரை ஆகலாம்," என்றார் கணேசன். 

முன்னதாக, சின்னத்தம்பி ஜனவரி 26ம் தேதி தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்டு வரகழியாறு வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால், சின்னத்தம்பி அங்கிருந்து வெளியேறி, ஊருக்குள் பயிர் சேதம் ஏற்படுத்தி சுற்றித் திரிந்த நிலையில், வனத்துறையினர் மீண்டும் அதனைப் பிடித்து முகாமில் விட்டுள்ளனர். மேலும், சின்னத்தம்பியை 24 மணி நேரமும் கண்காணித்து சிறப்புப் பயிற்சி வழங்க உள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...