சிக்னல்களில் சாலை விதிமீறல்களைக் கட்டுப்படுத்த அதிநவீன கேமராக்கள் : கோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைக்கிறார்

கோவை : உயிர் அமைப்பு சார்பில் கோவை சிக்னல்களில் சாலை விதிமீறல்களை கட்டுப்படுத்த அதிநவீன கேமராக்களின் பயன்பாட்டை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைக்கிறார்.

கோவை : உயிர் அமைப்பு சார்பில் கோவை சிக்னல்களில் சாலை விதிமீறல்களை கட்டுப்படுத்த அதிநவீன கேமராக்களின் பயன்பாட்டை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைக்கிறார். 

 

நிகழ்ச்சி குறித்து கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உயிர் அமைப்பு நிர்வாகிகள் டாக்டர் ராஜசேகரன், விஜய் மோகன் மற்றும் கிருஷ்ணன். ஆகியோர் கூறியதாவது :- சாலை விழிப்புணர்வு குறித்த பிரச்சாரங்களை கல்லூரி மாணவர்களின் மூலம் அவிநாசி ரோடு மற்றும் மேட்டுப்பாளையும் ரோட்டில் மேற்கொள்ளப்பட்டது. 

உயிர் அமைப்பின் மருத்துவப் பிரிவின் கீழ் மினி மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. மேலும், ரூ. 4.5 கோடி மதிப்புள்ள அதிநவீன சாலை பாதுகாப்பு உபகரணங்களான என்.பி.ஆர். மற்றும் சி.சி.டி.வி. கேமராக்கள், தடுப்பரண்கள், குறியீட்டு பலகைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இவை நகரத்தின் 10 முக்கிய சாலைகள் மற்றும் 40 சந்திப்புகளிலும் பொருத்தப்பட்டுள்ளது.

விதிமீறுபவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு இன்றைய நவீன தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்துவது ஒரு சிறந்த வழியாகும். இதன் வழியாக சாலைகளில் விதிகளை மீறினால் உடனடியாக விதிமீறல் குற்றம் பதிவு செய்யப்படுகின்றது என்ற உணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும். 

விதிமீறல் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. உயிர் அமைப்பினால் தற்போது சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் இரவில் மிகக்குறைந்த ஒளியில் இயங்கக்கூடிய திறன் வாய்ந்தவை. மேலும், அதிவிரைவாக செல்லும் வாகனங்களின் எண்களையும் இதனால் படம்பிடிக்க இயலும். 

முதற்கட்டமாக அதிநவீன சிக்னல்களாக மேம்படுத்தப்பட்டுள்ள ஐந்து சிக்னல்களை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைக்க உள்ளார். 

நாளை மாலை 6 மணிக்கு அண்ணா சிலை சிக்னலில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக, ஜே.எம். பேக்கரி சந்திப்பு, எல்.ஐ.சி. சந்திப்பு, குப்புசாமி நாயுடு மருத்துவமனை சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு, லட்சுமி மில்ஸ் சந்திப்பு உள்ளிட்ட சந்திப்புகளில் அதிநவீன சிக்னல்களாக இயங்கும். 

அடுத்த கட்டமாக நகரின் அனைத்து சிக்னல்களிலும் இது செயல்படுத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் உயிர் அமைப்பின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள், எனத் தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...