கோவை : நாடு முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் ஒரு சமையல் எண்ணெய்யை 3 முறைக்கு மேல் பயன்படுத்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது.
கோவை : நாடு முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் ஒரு சமையல் எண்ணெய்யை 3 முறைக்கு மேல் பயன்படுத்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் செயல்பட்டு வரும் உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளை நீண்ட நாள் பயன்படுத்தக் கூடாது.
சமையல் எண்ணெயை பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடுகள் வரும் மார்ச் 3-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதாவது, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை 3 முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.
அவ்வாறு பயன்படுத்துவதன் மூலம், மனிதர்களின் உடலில் வேதிப்பொருள், ஊட்டச்சத்து மற்றும் உணர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது. எனவே, ஓட்டல்கள் மற்றும் உணவகங்களை வைத்திருப்போர்கள் நாள்தோறும் அடிப்படையில் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.
3 முறைக்கு மேல் பயன்படுத்தப்படும் எண்ணெய் பொருட்கள் விஷமப் பொருளாக மாறுகிறது. எண்ணெய் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால், உடலில் மொத்த போலார் காம்பவுண்ட்ஸ் சேர்ந்து எதிர்மறையான செயல்களை ஏற்படுத்தும். குறிப்பாக உயர் அழுத்தம், சிறுநீரக நோய், கொழுப்பு அதிகரிப்பு, ஆத்ரோஸ்கிளெரோஸிஸ் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உருவாகிறது.
உணவகங்களை நடத்தி வருபவர்கள் ஒருநாளைக்கு 50 லிட்டர் எண்ணெயை பயன்படுத்தி வந்தால், அதன் விபரங்களையும், அப்புறப்படுத்த எண்ணெய்யின் விபரங்களையும் முறையாகப் பராமரித்து வர வேண்டும். எண்ணெய் பயன்படுத்தப்பட்ட நாள் மற்றும் அது எவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டது என்பது பற்றியும் அன்றாடம் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.