கோவை : நாடாளுமன்ற தேர்தலில் பதிவு செய்த வாக்கினை வாக்காளர்கள் உறுதி செய்யும் இயந்திரத்திற்கான பயிற்சி மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதி செய்யும் கருவி இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் இதற்கான பயிற்சியும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி என அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் வசிக்கும் வாக்காளர்களுக்கு 33 வார்டுகளிலும், நகராட்சி ஆணையர் காந்திராஜ் உத்தரவின் பேரில், நகராட்சி பணியாளர் ஜெயராமன் தலைமையில் 6 பேர் கொண்ட இரு குழுவினர் வாக்காளர் அளித்த வாக்கினை உறுதி செய்யும் இயந்திரத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், அண்ணா மார்க்கெட், எம்.எஸ்.ஆர். புரம், கெண்டையூர், சிறுமுகை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு யாருக்கு வாக்களித்தோம் என்பதனை தெரிந்து கொள்ளும் மாதிரி பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.