Update: ஹைட்ராலிக் வசதி கொண்ட சிறப்பு லாரியில் எந்தவித காயமுமின்றி ஏற்றப்படும் சின்னத்தம்பி

திருப்பூர் : உடுமலையில் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டுள்ள சின்னத்தம்பியை, கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறப்பு லாரியில் ஹைட்ராலிக் முறைப்படி இடமாற்றம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


திருப்பூர் : உடுமலையில் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டுள்ள சின்னத்தம்பியை, கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறப்பு லாரியில் ஹைட்ராலிக் முறைப்படி இடமாற்றம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 



சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா கண்ணாடிப்புத்தூர் பகுதியில் உள்ள கரும்பு காட்டில் முகாமிட்டுள்ள சின்னத்தம்பியை இடமாற்றம் செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அதிகாலை, கரும்பு காட்டிற்குள் முகாமிட்டிருந்த சின்னத்தம்பியை டிரான் மற்றும் கும்கி யானைகள் கலீம் மற்றும் சுயம்பு ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. 



பின்னர், சின்னத்தம்பிக்கு மயக்க ஊசி செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், 4 முறை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, வனத்துறையினர், கால்நடை மருத்துவர் அசோகனின் உதவியுடம் 5-வது முயற்சியில் சின்னத்தம்பியின் வலது தொடைப் பகுதியில் மயக்க ஊசியை செலுத்தினர். 



இருப்பினும், மயக்கமடையாத சின்னத்தம்பி விவசாய நிலங்களில் புகுந்தது. பின்னர், கும்கி யானைகளைப் பயன்படுத்தி தொடர்ந்து சின்னத்தம்பியை கண்காணித்து வந்தனர். இதையடுத்து, ஒருவழியாக, மயக்கமடைந்த சின்னத்தம்பியை வாழைத்தோட்டத்திற்குள் வைத்து மடக்கி பிடித்தனர். பின்னர், சின்னத்தம்பியின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த ரேடியோ காலர் எனப்படும் ஜி.பி.எஸ். கருவியை அகற்றினர். 



கடந்த முறை தடாகம் பகுதியில் பிடித்து லாரியில் ஏற்றும் போது, சின்னத்தம்பிக்கு மனதளவிலும், உடலளவிலும் பலத்த காயம் ஏற்பட்டன. இதனை தடுக்கும் விதமாக, காட்டு யானை சின்னத்தம்பியை பிடித்து வனத்துறையினர் கட்டுப்பாட்டில் வைக்க உத்தரவிட்டிருந்த சென்னை உயர்நீதிமன்றம், சின்னத்தம்பியை பிடிக்கும் போது, அவனுக்கு எந்த காயமும் ஏற்படக் கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தது. 



இதனிடையே, கேரள மாநிலத்தில் யானைகளை பிடித்து வாகனத்தில் ஏற்றுவதற்கு எளிதாக, ஹைட்ராலிக் வசதி கொண்ட லாரிகள் தயார் செய்யப்பட்டன. எனவே, எந்தவிதமான காயமும் இன்றி சின்னத்தம்பியை ஏற்றி, ஆனைமலைக் கொண்டு செல்வதற்காக, கேரளாவில் இருந்து ஹைட்ராலிக் வசதி கொண்ட சிறப்பு லாரி உடுமலைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. 



"லாரியில் யானையை ஏற்றுவது மிகவும் அரிதான காரியம். இதற்காக, கும்கி யானைகளின் மூலம் காட்டு யானையை பின்புறத்தில் இருந்து தள்ளப்பட்டு, லாரியில் ஏற்றப்படுகிறது. இந்தப் பணியின் போது, யானைகளுக்கு காயம் ஏற்படுவது தடுக்க முடியாத ஒன்றாகும். ஆனால், ஹைட்ராலிக் முறையில், கும்கி யானைகளின் உதவியில்லாமல், காட்டு யானையை எளிதில் லாரிக்குள் இழுத்து ஏற்ற முடியும்," என்றார் கண்ணாடிப்புத்தூரில் சின்னத்தம்பியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வன அதிகாரிகளில் ஒருவர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...