ஜனவரி மாதம் ஓய்வூதியம் வழங்கப்படாததைக் கண்டித்து கோவையில் ஓய்வூதியர்கள் போராட்டம்

கோவை : ஜனவரி மாதத்திற்குரிய ஓய்வூதியம் வழங்கப்படாததைக் கண்டித்து கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் 1,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை : ஜனவரி மாதத்திற்குரிய ஓய்வூதியம் வழங்கப்படாததைக் கண்டித்து கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் 1,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள டி.என்.எஸ்.டி.சி கோவை தலைமை அலுவலகம் முன்பு நடந்த இப்போராட்டத்தின் போது, கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒய்வூதியர்களுக்கு ஜனவரி மாதம் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியம் காலதாமதம் இல்லாமல் எல்லா மாதங்களிலும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து ஓய்வுபெற்றோர் நலஅமைப்பு பொதுச்செயலாளர் செல்வராஜ் கூறுகையில், "கோவை மண்டலத்தில் 7,000 ஒய்வூதியர்கள் உள்ளனர். ஜனவரி 10-ம் தேதி வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் இன்று வரை முழுமையாக வழங்கப்படவில்லை. தற்போது வரை 3,000 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் காலதாமதம் இல்லாமல் வழங்கப்பட வேண்டும்," என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...