Update: சின்னத்தம்பி யானை பிடிக்கப்பட்டது : ஆனைமலை முகாமிற்கு கொண்டு செல்லப்படுவதால் ரேடியோ காலர் அகற்றம்

திருப்பூர் : உடுமலையில் உலா வரும் சின்னத்தம்பியை பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.


திருப்பூர் : உடுமலையில் உலா வரும் சின்னத்தம்பியை பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். 



கோவை மாவட்டம் தடாகத்தில் இருந்து பிடித்துச் செல்லப்பட்டு டாப் ஸ்லிப்பில் விடப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பி, கடந்த 14 நாட்களாக திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உலா வருகிறது. கிருஷ்ணாபுரம் வாய்க்கால் பாலம் பகுதியில் இருந்த சின்னத்தம்பி யானை, அங்கிருந்து மீண்டும் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா கண்ணாடிப்புத்தூர் பகுதியில் கரும்பு காட்டில் முகாமிட்டுள்ளது.

இதனிடையே, காட்டு யானை சின்னதம்பியை பிடித்து, தற்போதைக்கு வனத்துறையினர் கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சின்னதம்பியை பிடிக்கும் போது, அவனுக்கு எந்த காயமும் ஏற்படக் கூடாது என்றும், சின்னதம்பி வனத்துறை கட்டுப்பாட்டுக்கு வந்த பின்னர், அவனை நிரந்தரமாக முகாமில் வைக்கலாமா..? அல்லது காட்டுக்கு அனுப்பலாமா..? என பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து, சின்னத்தம்பி உலா வருவதை நேரில் ஆய்வு செய்த சின்னத்தம்பியை பிடித்து கூண்டில் அடைத்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், சாதகமான சூழலில் சின்னத்தம்பியை பிடிப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இன்று அதிகாலை, கரும்பு காட்டிற்குள் முகாமிட்டிருந்த சின்னத்தம்பியை டிரான் மற்றும் கும்கி யானைகள் கலீம் மற்றும் சுயம்பு ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. பின்னர், சின்னத்தம்பிக்கு மயக்க ஊசி செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், 4 முறை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, வனத்துறையினர், கால்நடை மருத்துவர் அசோகனின் உதவியுடம் 5-வது முயற்சியில் சின்னத்தம்பியின் வலது தொடைப் பகுதியில் மயக்க ஊசியை செலுத்தினர். 

இருப்பினும், மயக்கமடையாத சின்னத்தம்பி விவசாய நிலங்களில் புகுந்தது. பின்னர், கும்கி யானைகளைப் பயன்படுத்தி தொடர்ந்து சின்னத்தம்பியை கண்காணித்து வந்தனர். இதையடுத்து, ஒருவழியாக, மயக்கமடைந்த சின்னத்தம்பியை வாழைத்தோட்டத்திற்குள் வைத்து மடக்கி பிடித்தனர். பின்னர், சின்னத்தம்பியின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த ரேடியோ காலர் எனப்படும் ஜி.பி.எஸ். கருவியை அகற்றினர். 



இதனிடையே, சின்னத்தம்பியை ஆனைமலை புலிகள் வனக் காப்பகத்திற்கு ஏற்றிச் செல்வதற்காக வனத்துறைக்குச் சொந்தமான லாரியும், ஜே.சி.பி. இயந்திரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...