ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வாகனம் மீது தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் உள்பட 41 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வாகனம் மீது தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் உள்பட 41 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, காரில் சென்ற தீவிரவாதி, திடீரென பாதுகாப்பு படை வீரர்கள் வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த பயங்கர தாக்குதலில், 2 தமிழக வீரர்கள் உள்பட பாதுகாப்பு படை வீரர்கள் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த சிலர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாதிகளின் இந்த தாக்குதலையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.