ஃபைன் பியூச்சர் நிறுவன மோசடி வழக்கு : ஏஜென்டுகள் 5 பேர் கோவையில் கைது

கோவை : கோவையில் நிதி மோசடியில் ஈடுபட்ட ஃபைன் பியூச்சர் நிறுவனத்தின் ஏஜென்டுகள் 5 பேரை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை : கோவையில் நிதி மோசடியில் ஈடுபட்ட ஃபைன் பியூச்சர் நிறுவனத்தின் ஏஜென்டுகள் 5 பேரை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



பீளமேட்டை தலைமையிடமாகக் கொண்டு ஃபைன் பியூச்சர் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில், முதலீட்டுக்கு அதிக வட்டி தரப்படும் எனக் கூறி கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பல்வேறு மாவட்டங்களில் ரூ. 800 கோடி வரை வசூலித்து மோசடி செய்யப்பட்டு வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் செந்தில்குமார், விவேக் மற்றும் அவரது சகோதரர் நித்யானந்தன், நிறுவனத்தின் ஊழியர் சத்தியலட்சுமி உள்ளிட்டோரை கைது செய்தனர்.

இந்த நிலையில், முதலீட்டாளர்கள் எனப்படும் பொதுமக்களிடம் பணத்தை வாங்கி, இந்நிறுவன நிர்வாக இயக்குனரிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு ஒப்படைக்கும் மோசடி பணியில் ஈடுபட்டு வந்த ஏஜென்டுகள் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகார் தொடர்பாக கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த ஏஜென்டுகள் பழனிசாமி (34) வேலுசாமி (32), இளங்கோ (35), கருப்பசாமி (38), சாந்தமூர்த்தி (40) ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...