கோவையில் கோவில் சிலை திருடப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது : கடத்தப்பட்ட சிலை மீட்பு

கோவை : பாப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள பட்டத்தரசி அம்மன் கோயிலிலிருந்து சிலை மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், ஒருவரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை : பாப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள பட்டத்தரசி அம்மன் கோயிலிலிருந்து சிலை மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், ஒருவரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் இந்து சமய அறநிலைய துறைக்குச் சொந்தமான பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை இந்த கோவிலை திறக்க வந்த ஊழியர், கோவிலின் பூட்டு மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்த பொழுது ஒன்றரை அடி உயரமும், 5 கிலோ எடையும் கொண்ட ஐம்பொன்னால் செய்யப்பட்ட பட்டத்தரசியம்மன் சிலை, சிலையில் இருந்த 5 கிராம் தாலிச் சங்கிலி, உண்டியல் பணம் ஆகியவையும் திருடப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

விசாரணையில், பாப்பநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஸ்ரீ ராமபுரத்தை சேர்ந்த தண்டபாணி (32), மற்றும் அவரது நண்பர் முருகன் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கோயில் செயல் அலுவலர் ரமேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீஸார் தண்டபாணி, முருகன் மீது அத்துமீறி நுழைதல், திருட்டு, பழமையான மற்றும் கலைப் பொக்கிஷங்கள் பாதுகாப்பு சிறப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். இதில், தண்டபாணி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து திருடப்பட்ட சிலை மீட்கப்பட்டு, சிலை திருட்டு தொடர்பாக விசாரிக்கப்பட்டது. மேலும், தலைமறைவாக உள்ள முருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட தண்டபாணியை ரேஸ்கோர்ஸ் போலீசார், நேற்று முன்தினம் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஐயப்பன், அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, தண்டபாணி அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...