திருப்பூர் : உடுமலையில் உலா வரும் சின்னத்தம்பியை பிடிப்பதற்கான பணியில், 4 முறை தோல்விகளுக்குப் பிறகு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் தடாகத்தில் இருந்து பிடித்துச் செல்லப்பட்டு டாப் ஸ்லிப்பில் விடப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பி, கடந்த 14 நாட்களாக திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உலா வருகிறது. கிருஷ்ணாபுரம் வாய்க்கால் பாலம் பகுதியில் இருந்த சின்னத்தம்பி யானை, அங்கிருந்து மீண்டும் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா கண்ணாடிப்புத்தூர் பகுதியில் கரும்பு காட்டில் முகாமிட்டுள்ளது.

இதனிடையே, காட்டு யானை சின்னதம்பியை பிடித்து, தற்போதைக்கு வனத்துறையினர் கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சின்னதம்பியை பிடிக்கும் போது, அவனுக்கு எந்த காயமும் ஏற்படக் கூடாது என்றும், சின்னதம்பி வனத்துறை கட்டுப்பாட்டுக்கு வந்த பின்னர், அவனை நிரந்தரமாக முகாமில் வைக்கலாமா..? அல்லது காட்டுக்கு அனுப்பலாமா..? என பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, சின்னத்தம்பி உலா வருவதை நேரில் ஆய்வு செய்த சின்னத்தம்பியை பிடித்து கூண்டில் அடைத்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், சாதகமான சூழலில் சின்னத்தம்பியை பிடிப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று அதிகாலை, கரும்பு காட்டிற்குள் முகாமிட்டிருந்த சின்னத்தம்பியை டிரான் மற்றும் கும்கி யானைகள் கலீம் மற்றும் சுயம்பு ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. பின்னர், சின்னத்தம்பிக்கு மயக்க ஊசி செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், 4 முறை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, வனத்துறையினர், கால்நடை மருத்துவர் அசோகனின் உதவியுடம் 5 வது முயற்சியில் சின்னத்தம்பியின் வலது தொடைப் பகுதியில் மயக்க ஊசியை செலுத்தினர். இதைதொடர்ந்து, கும்கி யானைகள் கலீம் மற்றும் சுயம்பு ஆகியவற்றின் சின்னத்தம்பியை லாரியில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது.