கோவை : ஊழல் செய்த பொறுப்பற்றவர்கள் ஒருங்கிணைந்த எதிர்கட்சிகளின் கூட்டணியை, கூட்டி அப்புறப்படுத்துவதற்காக கூட்டணி தேவைப்படுவதாக கோவையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி நடந்த கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் இந்து அமைப்புகள் சார்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க., தேசிய செயலாளர் எச்.ராஜா, மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதாவது :- கும்பகோணத்தில் மதமாற்றும் சக்திகளை தட்டிக் கேட்டதற்காக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாதத்தை வேர் அறுக்கப்பட வேண்டிய அவசியம் உருவாகி உள்ளது. மதம் மாற்றுத் தடை சட்டத்தைக் கொண்டு வர அவசியம் ஏற்பட்டுள்ளது. பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய வேண்டும்.
பா.ஜ.க., கூட்டணியை கட்சி தலைமையே முடிவு செய்யும். பாண்டிச்சேரி கைவிட்டு போவது உறுதி என தெரிந்ததால், அரசின் சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி போராட்டம் நடத்துகிறார்.
தி.மு.க.,வை ஸ்டாலின் வழிநடத்தவில்லை. பிரிவினைவாத தேச துரோக சக்திகள் ஸ்டாலினை வழி நடத்துகிறது. சுயமாக சிந்தித்து கட்சியை வழிநடத்த தெரியாத தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். எதிர்க்கட்சி கூட்டணி என்பது ஊழல் செய்த பொறுப்பற்றவர்களின் கூட்டணியாக இருக்கிறது. இந்தக் கூட்டணியை கூட்டி அப்புறப்படுத்த கூட்டணி தேவைப்படுகிறது,இவ்வாறு எச். ராஜா கூறினார்.
இதையடுத்து, காவல்துறை அனுமதியின்றி அஞ்சலி செலுத்திய எச்.ராஜா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.