காதலர் தினத்தில் காதலர்களை திகைக்க வைத்த ரோஜா பூக்களின் விலை

நீலகிரி : உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உதகையில் ரோஜா பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

நீலகிரி : உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உதகையில் ரோஜா பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 



காதலர் தினத்தையொட்டி காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில், மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லேட் மற்றும் பரிசுப் பொருட்கள் என தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசளித்து மகிழ்வார்கள். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு காதலர் தினத்தன்று காதலர்கள் அதிகளவில் வருகை தந்தனர். மேலும், புதிதாக திருமணமான தம்பதிகள் உதகைக்கு வந்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.

உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம், தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் இன்று காதலர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட் செல்போன்கள் மூலம் வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக காதலர் தின குறுஞ்செய்தி, புகைப்படங்களை அனுப்பினாலும், ரோஜா பூ மற்றும் வாழ்த்து அட்டைகளைக் கொடுப்பது இன்றும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

உதகையில் பலவகை மலர்கள் மற்றும் கொய்மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. காதலர் தினத்தையொட்டி உதகையில் உள்ள மலர் விற்பனையகங்களில் ரோஜா பூக்கள், கார்னேசன், லில்லியம், புளுடைசி, ஜெர்புரா, ஆர்கிட் மலர்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. கடந்த ஆண்டு ரோஜா பூ ஒன்றின் விலை ரூ. 15-க்கு விற்பனை ஆனது. இந்த ஆண்டு ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உதகைக்கு தாஜ்மஹால் ரோஜா வகை பூக்கள் விற்பனைக்கு வந்து உள்ளது.

மஞ்சள், சிவப்பு, வெள்ளை, பிங்க், ஆரஞ்சு ஆகிய நிறங்களில் ரோஜா பூக்கள் உள்ளன. காதலர் தினத்தையொட்டி உதகையில் ரோஜா பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. காதலர் தினத்தன்று மனம் கவர்ந்தவர்களுக்கு ரோஜா பூ மற்றும் விதவிதமான பரிசுகளை கொடுத்து தங்களது அன்பையும், காதலையும் வெளிப்படுத்துவார்கள். தாஜ்மகால் ரோஜா பூ உள்ளிட்ட பூக்களை வாங்க காதலர்கள் ஆர்வம் காட்டினர். இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...