கோவை : கோவை - ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த துருங்கியா மாநிலத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

கோவை மாவட்டம் மற்றும் துருங்கியா மாநிலத்திலும் மேற்கொள்ளப்படும் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் துருங்கியா மாநிலத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் வோஃல்ப்கேங் டிஃபென்ஸி கையெழுத்திட்டார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சர் கூறியதாவது :- 2012-ம் ஆண்டு முதல் இந்தியா எங்களது வர்த்தக நாடுகளில் ஒன்றாகும். அதன்படி, பல்வேறு இந்தியா வர்த்தக கூட்டமைப்பு மற்றும் இந்திய வெளியுறவுத்துறையின் மூலம் எங்களது வர்த்தகம் விரிவடைந்துள்ளது.

தற்போது, துருங்கியாவைச் சேர்ந்த 89 நிறுவனங்கள் இந்தியாவுடன் வர்த்தக தொடர்பு வைத்துள்ளன. குறிப்பாக, மருத்துவ தொழில்நுட்பம், ஆப்டிக்ஸ், போட்டோனிக்ஸ் மற்றும் பொறியியல் துறையில் துருங்கியா - இந்தியா இடையே தொடர்பு இருக்கிறது.
மேலும், ஆட்டோமொட்டிவ், மெக்கட்ரோனிக்ஸ் மற்றும் பொறியியல் துறையில் உள்ள விதிமுறைகள் துருங்கியா மற்றும் கோவை இடையே ஒரே மாதிரியானவையாகும். இந்தியா - துருங்கினியா இடையே இதுவரை 19 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

ஜெர்மன் நாட்டின் பொது தூதர் கரின் ஸ்டோல் கூறுகையில், "இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், ஜெர்மன் நாட்டின் அந்நிய முதலீட்டிற்கு தென்கிழக்கு மாநிலங்களின் கலாச்சாரம் உகந்ததாக உள்ளது. மேலும், இந்தியா, ஜெர்மனி இடையிலான உறவு மிகவும் நெருக்கமானதாகும்.

ஐரோப்பா யூனியனில் உற்பத்தித் துறையில் ஜெர்மனிக்கு மிக நெருங்கிய நாடாக இந்தியா உள்ளது. அதேபோல, உலகளவில் 6-வது நாடாக திகழ்கிறது. தமிழகத்தில் மட்டும் 130 நிறுவனங்களில் 25,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன," என்றார்.

ஜெர்மனி - இந்தியா ரவுண்ட் டேபிள் கோவை சாப்டரின் நிறுவனர் கே. ராமசாமி கூறுகையில், "இந்த ஒப்பந்தமானது, கோவை மற்றும் துருங்கியாவில் உள்ள தொழிற்சாலைகளின் நீண்ட நலனுக்கான சிறந்த ஒத்துழைப்பு நடவடிக்கையாகும்," எனக் கூறினார்.