கோவை : கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரை நினைவு கூறும் வகையில், இந்து அமைப்பினர் ஈடுபட்ட பேரணியையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை : கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரை நினைவு கூறும் வகையில், இந்து அமைப்பினர் ஈடுபட்ட பேரணியையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் நடந்து 21வது வருடமான நிலையில், இன்று இந்து அமைப்பினர் அவர்களை நினைவு கூறும் விதமாகப் பேரணி நடத்துகின்றனர். இந்த பேரணியினால் ஆர்.ஏஸ்.புரம் தபால் நிலையத்திலிருந்து, ரத்தினபுரி விநாயகர் கோவில் சந்திப்புக்கு இடையே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலத்தை முன்னிட்டு டி.பி சாலையில் உள்ள முக்கியமான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதில், கலந்து கொண்ட உறுப்பினர்கள் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு,
மேற்கு லோகமணியா தெருவில் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தவுள்ளனர். இதுவும் குண்டு வெடித்த பகுதியில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பேரணியை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.