கோவை : கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தோருக்கு மேட்டுப்பாளையத்தில் பாஜகவினர் மலர் தூவி, மவுன அஞ்சலி செலுத்தினர்.

கோவை மாவட்டத்தில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி பாஜக துணைத்தலைவர் அத்வானி பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.
அப்போது, கோவை மாவட்டத்தை சேர்ந்த பாஜக இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்தனர். இதில், தீவிரவாதிகளின் சதி செயல் காரணமாக குண்டு வெடித்தது. இதனால், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மட்டுமின்றி வேடிக்கைப் பார்க்க சென்ற சிறு குழந்தைகள் என ஏராளமானோர் உயிரிழக்க நேரிட்டது.
மேலும், இந்த குண்டு வெடிப்பில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையொட்டி, ஆண்டுதோறும் இறந்தவர்களின் உறவினர்களுடன் இணைந்து மேட்டுப்பாளையம் பாஜகவினர் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில், குண்டு வெடிப்பு நடந்த தினமான இன்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் வைத்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், தீவிரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.