கோவையில் கேக் வெட்டி காதலர் தினத்தைக் கொண்டாடிய சமூக நீதி கட்சியினர்

கோவை : கோவையில் காதலர் தினத்தை கேக் வெட்டியும், பலூன்களை பறக்கவிட்டும் சமூக நீதி கட்சியினர் கொண்டாடினர்.


கோவை : கோவையில் காதலர் தினத்தை கேக் வெட்டியும், பலூன்களை பறக்கவிட்டும் சமூக நீதி கட்சியினர் கொண்டாடினர். 

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பல்வேறு வகையில் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவையில் காதலர் தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இதையடுத்து, இன்று காலையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில், பெரியார் படிப்பகம் முன்புள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர், கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. 

அதை போலவே, சமூக நீதி கட்சியினர், காதலர் தினத்தை ஆதரித்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பலூன்களை பறக்க விட்டும், கேக் வெட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இதன் பின்னர் பேசிய அக்கட்சியின் தலைவர் பன்னீர் கூறுகையில், "சாதி, மதம் மறுப்பு மணம் புரிந்தோருக்கு சாதியற்றோர் தனி இட ஒதுக்கீடு வேண்டும். ஆணவ கொலைகளை தடுக்கத் தனி சட்டம் இயற்றிட வேண்டும்," என வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...