அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிடிவி அணிக்கு செல்ல வாய்ப்பில்லை - கோவையில் எம்.பி. கோபாலகிருஷ்ணன் உறுதி

கோவை : டிடிவி தினகரன் அணிக்கு, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வதற்கான சாத்தியக்கூறு இல்லை என நீலகிரி தொகுதி அதிமுக எம்.பி. கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை : டிடிவி தினகரன் அணிக்கு, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வதற்கான சாத்தியக்கூறு இல்லை என நீலகிரி தொகுதி அதிமுக எம்.பி. கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் நீலகிரி தொகுதி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசியதாவது ;- சுற்றுலாத்தளமான நீலகிரிக்கு அதிக ரயில் விட வேண்டும். நீலகிரி அரசு மருத்துவமனை நவீனமயமாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திள்ளேன். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிடிவி தினகரன் அணிக்கு செல்வதற்கான சாத்தியக்கூறு இல்லை. 

நாடாளுமன்றத்தில் மூன்றாம் இடத்தில் உள்ள அதிமுக, வரும் தேர்தலில் இரண்டாம் இடம் பெற முயற்சிக்கும். நீலகிரி தொகுதியில், அதிமுக கூட்டணியில் உள்ள மாற்று கட்சி போட்டியிடும் என்பது தவறான தகவல். மேலும், நான் மீண்டும் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை தான் முடிவெடுக்கும். நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக உறுப்பினர்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர், இவ்வாறு அவர் பேசினார். 

இதையடுத்து, கூட்டணி குறித்த கேள்விக்கு, "தேர்தல் கூட்டணி குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. கூட்டணி மற்றும் பாஜக விமர்சனம் தொடர்பான தம்பிதுரையின் கருத்து என்பது அவரது சொந்த கருத்து," என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...