கோவை : கோவையில் மனித-விலங்கு மோதல்களைக் குறைக்க, குறைந்த, மற்றும் நீண்ட கால தீர்வு என இருவகையான தீர்வு அடங்கிய அறிக்கையை யானைகளின் நிபுணர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சின்னத்தம்பி யானையை ஏன் முகாம் யானையாக மாற்ற வேண்டும் என கடந்த 8ம் தேதி அஜய் தேசாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், கோவை மாவட்டத்தில், 2011 மற்றும் 2018ம் ஆண்டுக்கு இடையில் மட்டும் மனித-விலங்கு மோதல்கள் காரணமாக, 77 உயிர்கள் பலியாகியுள்ளன. மொத்த மாநிலத்துடன் ஒப்பிடும் போது கோவை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உயிர் பலியில் முதலாவதாக உள்ளது என யானைகளின் நிபுணர் அஜய் தேசாய் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை மாவட்ட பகுதியில், காட்டு யானைகள் மூலம் 61 பேர் காயம் அடைந்துள்ளனர். மாதம் ஒன்றிற்கு குறைந்தபட்சம் இருவர் உயிரிழப்புக்கு ஆளாகின்றனர். ஒரு வருடத்திற்கு கணக்கெடுக்கும் போது 10 முதல் 27 பேர் உயிரிழக்கின்றனர். இது போன்ற சம்பவங்களைப் பார்க்கும் விவசாயிகளுக்கு யானைகளைக் கண்டு பயம் ஏற்படுகிறது. தங்களுடைய உயிரைத் தற்கொள்ள யானைகளை விளைநிலங்களில் விடுகின்றனர்.
ஆகவே, விவசாயிகளுக்கு யானைகளால் பொருளாதார அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், மனிதர்களின் உயிருக்கு நேரடியாகவோ அல்லது இந்த யானையினைப் பின் தொடரும் யானைகளாலோ ஆபத்து ஏற்பட வாய்ப்பு உருவாகிறது. இதனைத் தொடர்ந்து விளை நிலங்களுக்குள் வந்து விடுவது போல, குடியிருப்பு பகுதிகளுக்கும் யானை வர வழி வகுப்பது, மனித-விலங்கு மோதல்களை உருவாக்கும்.
அதே அறிக்கையில், கோவையில் யானை மற்றும் மனித மோதல்களைக் குறைக்க குறுகிய மற்றும் நீண்ட கால தீர்வுகளைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அதில், குறுகிய கால தீர்வை பற்றி கூறுகையில், "வயசான பெண்யானைகள் அதன் கூட்டத்தை சேர்ந்த யானைகள் அதிகளவில் பயிர் சேதம் செய்வதில் ஈடுபடுகின்றன. அதனை சரியான முறையில் கையாண்டு, வயலுக்குள் விடாமல் வெளியேற்ற வேண்டும். அதற்கு தகுந்த ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம் மற்றும் அன்டி டிப்ரிடேசன் டீம் ஆகியவற்றைத் தயார் செய்ய வேண்டும்.
இதன் மூலம் இளம் ஆண்யானைகள் மற்றும் பெண் யானைகளை, நன்கு பயிற்சி பெற்ற கும்கி யானைகளின் உதவியுடன் அப்புறப்படுத்த வேண்டும். வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறும் காரணத்தை குறித்து ஆராய வேண்டும். இதற்காக, தனிப்படை அமைக்க வேண்டும், என்றார். மேலும், யானைகள் வெளியில் வரும் வகையிலாக அகழிகள் இருக்கும் இடங்கள் மற்றும் வனத்திலிருந்து வெளியேறு வழிகள் போன்றவற்றை கண்டறிய வேண்டும். களப்பணியில் இருக்கும் வனத்துறை அதிகாரி கோவை மற்றும் கல்லாறு பகுதிகளில் யானைகளின் அசைவுகளை நுண்ணிப்பாகக் கவனிக்க வேண்டும், ஆகியவற்றைக் குறுகிய கால தீர்வில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நீண்ட கால தீர்வு குறித்து அஜய் தேசாய் கூறியுள்ளதாவது ;- வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறாமல் இருக்கும் வகையில் வேலி அமைத்தல் ஒரு வழியாகும். கர்நாடகாவில் ரயில் தண்டவாளங்களை வைத்து அமைத்துள்ள வேலி மற்றும் ஓசூர் வனத்துறை அமைத்துள்ள ஆம்ஸ்ட்ராங் டிசைன் போன்ற தடுப்பு முறைகளை பயன்படுத்தலாம். இது போன்ற முறைகளைப் பயன்படுத்தி யானைகளை வயலுக்குள் வரவிடாமல் தடுக்க முடியும். ஆனால், இந்த முறைகள் அதிக செலவாகும்.
ஆகையால், எந்நேரமும் யானைகளைக் கண்காணிக்க வேண்டும். யானைகள் வெளியேறும் அகழிகளை மற்றும் வழிப்பாதைகளைக் கண்டறிந்து உடனடியாக சரிசெய்ய வேண்டும். இதனிடையே, அங்கிருந்து வெளியேறிய யானைகளை மீண்டும் வனப்பகுதியில் திருப்பி அனுப்ப உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும். இதற்கு முதன்மையாக எந்தெந்த யானைகள் பிரச்சினையில் ஈடுபடுகின்றன என அறிந்து கொள்ள வேண்டும். களப்பணியில் ஈடுபடும் வனத்துறை அதிகாரிகள் இது குறித்து அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு அனுபவம் வாய்ந்த ஆட்கள் மற்றும் கும்கி யானைகளை நியமிக்க வேண்டும்.
குறிப்பாக, கோவையில் பிரத்தியேகமாக நிரந்தர யானைகள் முகாம் அமைக்கப்பட வேண்டும். இந்த முகாமில் அமைக்கும் பகுதியில் தண்ணீர், உணவு, போதிய இடவசதி இருக்கும் வகையில் அமைத்தல் அவசியம். மேலும், முதுமலை மற்றும் ஆனமலையில் உள்ள யானைகள் இங்கு சுழற்றி முறையில் வந்து செல்வதாக அமைய வேண்டும், இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, தேசாய் அறிக்கையில் கல்லாறு பகுதியில் உள்ள செங்கல் சூளைக் குறித்து குறிப்பிட்டுள்ளார். செங்கல் உற்பத்திக்காக அங்கு குவிக்கப்பட்டுள்ள மணலில் உருவாகும் புல்லில் ஈர்க்கப்பட்டு ஊருக்குள் வருகின்றன. இதைப் போலவே, பவானி சாகர் அணைப்பகுதியையும் பாதுகாக்க வேண்டும். யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை சுதந்திரமாக விட வேண்டும். சட்டத்தை மீறி அமைக்கப்பட்டுள்ள செங்கல் சூளை, மனித குடியிருப்புக்குள் யானைகள் நுழைவதற்கு முக்கிய காரணமாகும். மேலும், சூழலியலை மாற்றியமைக்காதபடி இருக்க காட்டுவாசிகளின் கட்டுபாட்டில் உள்ள நிலங்களை மூன்றாம் நபர் கைப்பற்றாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, வனப்பகுதிக்குள் யானைகளின் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும், இதன் மூலன் மனித-விலங்கு மோதல்களைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்கிறார், அஜய் தேசாய்.
இந்த அறிக்கையில், யானைகளால் உயிரிழக்கும் மனிதர்களைப் பற்றி பேசியது போல, மனிதர்களால் உயிரிழக்கும் யானைகளைப் பற்றி பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.